பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மாணவ மணிகளே, உங்களிடம் தமிழார்வம் தலைதுாக்கி நிற்கின்றது கண்டு பெருங்களி கொள்கின்ருேம். அவ்வார்வம் கிலேத்து நிற்க வேண்டுமானுல் இலக்கியப் பயிற்சி வேண்டும். அவ்வாருயின் இலக்கியத்தை எவ்வாறு பயில்வது? இலக்கியத்தை எவ் வாறு சுவைப்பது ? என்பனவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்தில் சுவை ஏற்படின் இலக்கியப் பற்றும் அதன் வாயிலாக மொழிப் பற்றும் ஏற்படும். ஆதலி ல்ை இவ்வடிப்படைகளை மனத்திற் கொண்டேஇவ்வுரை நூல் எழுதப்பட்டுள்ளது. இவ்வுரை நூல் சொற்பொருள், கருத்து, விளக்கம், இலக் கணக் குறிப்பு, விவிைடை முதலிய கூறுகளைக் கொண்டுள் ளது. இந்நூல் உங்கள் வெற்றிக்குப் பெரிதும் துணைபுரிவ. துடன் அறிவு வளர்ச்சிக்கும் உதவி செய்து சிந்திக்கத் துண்டும் என்பது ஒருதலே. இவ்வாண்டு துனைப்பாடங்கட்கு உரைநூல் தனியாக எழுதி வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள இரு துணைப்பாடங்களுக்கும் சேர்ந்து ஒரே புத்தகமாக வெளி வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிருேம் இவ்வுரை நூல் எழுதியுதவிய கவிஞர் முடியரசன் அவர் கட்கு எங்கள் நன்றி உரியதாகும். உங்கள் கருத்துக்களை எங் கட்கு எழுதுங்கள், உங்கள் தமிழாசிரியரிடம் கேட்டு அவர் தம் கருத்துக்களையும் எழுதுங்கள். உங்கள் ஆசிரியர்கட்கு இப்பொழுதே நன்றி கூறிக் கொள்கிருேம். உங்கட்கு எங்கள் நல்வாழ்த்து . மாணவர் நலம் விரும்பும் பதிப்பகத்த ார்.