பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புச் செய்யுள் வினவிடை *}() }; 2. கபிலர் பாடலில் இயற்கைக் காட்சி எவ்வாறு வரு னிக்கப்படுகிறது ? இதற்கு முதல் வினவிற்குரிய விடையையே விடையாகக் கொள்க. 8. தலைவிகண்ட தலைவன் எவ்வாறு வந்து நின்ருன் ? அழகிய வலிய வில்லைக் கையிற்பற்றி, அம்புகளைத் தெரிந் தெடுத்துத் தன்னல் எய்யப்பட்ட யானே சென்ற வழியை வினவிக் கொண்டு, திணைப்புனத்தின் ஒரு பக்கத்தில் மலர்தார் மார்பகிைய தலைவன் வந்து நின்ருன். 4. மலர்தார் மார்பனைக் கண்ட தலைவியின் நிலை என்ன? ஏன் அந்நிலை யடைந்தாள் ? மலர்தார் மார்ப்பனைப்பலரும் கண்டார்கள். ஆயினும் தலைவி. மட்டும் இரவிலே படுக்கையிற் கிடந்து,_நீர் வார்கின்ற கண்களை யுடையள்ளாகித் துயிலாது, தோள்கள் மெலியப் பெற்ருள். அவள் அவன்மேற் காத்ல்கொண்டமையால் இந்நிலையை அடைந்தாள். 5. இலக்கணக் குறிப்புத் தருக. . மருள்வன நோக்க-முற்றெச்சம். அவிர்துளை மருங்கில்-வினைத்தொகை. வண்டிபாழாக--குற்றியலிகரம். சென்னெறி விஅைய்-இசை நிறையளபெடை. கின்ருேன்ருேற் கண்டேர்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. பலர் தில்வாழி-அசைநிலை. எவன்கொல்-அசைநிலை. 6. பிரித்தெழுதுக. வண்டியாழ்-வண்டு--யாழ். ஒரியான்-ஒர்-யான். தன்னெழிமெய்ம்முன் யவ்வரின் இக ரம் துன்னும் என்ற விதிப்படி இகரம் பெற்று வந்தது. இ. திருமுருகாற்றுப்படை 1. திருமுருகாற்றுப்படை -பெயர்க்காரனந்தருக வீடுபேறு அடைதற்குரிய ஒருவனை, வீடுபெற்ற ஒருவன் முருக னிடத்து ஆற்றுப் படுத்துவதால் அஃதாவது வழிகறி அனுப்புவ தால் இது திருமுருகாற்றுப்படை என்று பெயர் பெற்றது. 2. பழமுதிர் சோலையின் அருவிகள் திருமுருகாற்றுப் படையில் எவ்வாறு வருணிக்கப்படுகின்றன? - பழமுதிர்சோலையிலுள்ள அருவிகள் துகிற் கொடியைப்போல அசைந்து, அகில் சந்தனம் முதலிய மரங்களை உருட்டிக்கொண்டு,