உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ot, சிறப்பு உரைநடை விவிைடை 14. எந்த நிலப்பகுதி சேர நாடாக விளங்கியது ? அதன் வளம் யாது ? அந்நாட்டின் தலைநகரமும் துறைமுக நகரமும் யாவை ? இன்று கேரள இராச்சியமாக உள்ள நிலப் பகுதியே சேர நாடாக விளங்கியது. வானளாவிய மலைகளும், மாபெருங் காடு களும் சேர நாட்டை அணி செய்தன. காடுகளில் சந்தனம், அகில், கருங்காலி முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்தன. ஆயிரக்கணக் கான யானைகள் அக் காடுகளில் வாழ்ந்து வந்தன. இந்த யானைகளின் தந்தமும் சேரநாட்டுச் செல்வப் பொருளாகிய மிளகும், தேக்கு முதலிய மரவகைகளும், மயிற்பீலிகளும், சந்த னம், ஏலம் முதலிய மணப்பொருள்களும் சேர நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. சேர நாட்டுத் தலைநகரம், பேரியாற்றங்கரையில் அமைந் திருந்த வஞ்சி மாநகரம் என்பது. இதற்கும் கருவூர் என மற்றெரு பெயர் அக்காலத்தில் வழங்கி வந்தது. தொண்டி, முசிரி என்பன சேரநாட்டுத் துறைமுக நகரங்களாக இருந்தன. 18. சேரநாட்டை ஆண்டவர்கள் யார் ? அவர் செய்தி" வீரச் செயல் யாது ? பதிற்றுப்பத்து முதலிய நூல் களால் அறியப்படும் செய்தி யாது ? சேர நாட்டைச் சேரர் என்ற அரச மரபினர் பன்னெடுங்கால மாக ஆண்டு வந்தனர். சேரநாட்டுப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களையும், அயல்நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய வந்த கப்பல்களையும் வழிமறித்துக் கொள்ளையிட்டு வந்த கடற் கொள்ளைக்காரரைச் சேரவேந்தர் அழித்தனர். சேரமன்னர், தங்கள் நாட்டுக் கடல் வாணிகத்தை வளமுற வளர்த்துச் சேர நாட்டைச் செல்வம் கொழிக்கும் திருநாடாகச் செய்தனர். சோழ பாண்டியரைப் போலவே சேர வேந்தரும் பைந்தமிழைப் பாங்குற வளர்த்தனர் என்பதைப் பதிற்றுப்பத்தாலும், பிற நூல்களாலும் நன்கறியலாம். 14. பழங்காலத்தில் எந்தெந்தக் குறுநிலங்களை எந்தெந்தக் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர் ? தொண்டை நாட்டில் திருக்கோவலூரும் அதனைச் சூழ்ந்த பகுதியும் மலையமானடு என வழங்கப்பெற்றது. மலையமான் குடி யினராகிய குறுநில மன்னர்கள், இந்நாட்டை ஆண்டு வந்தனர். மலையமானுட்டின் தென்பகுதி, பிற்காலத்தில் திருமுனைப்பாடி நாடு எனப் பெயர் பெற்றதென்று தெரிகிறது. தொண்டை நாட் டில் வேங்கடமலையையும், அதனைச் சூழ்ந்த பகுதியையும் புல்லி என்ற கள்வர் தலைமகன் ஆண்டு வந்தான். இப்போது திண்டிவனம்