பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ46 இலக்கணக் குறிப்புக்கள் என்னும் நெடில் அளபெடுத்து வந்தது. அதற்கு அறிகுறியாக அதனருகில் அ என்ற குறில் இடப்பட்டுள்ளது. - (அளபெடை-அளபு-எடை அளபு-மாத்திரை, எடைமிக்குவருவது) இன்னிசை அளபெடை செய்யுளில் ஒசைகுறையாதிருந்தாலும் சிற்சில இடங்களில் இனிய ஓசைக்காக அளபெடுப்பதுண்டு. அஃது இன்னிசை அளபெடை எனப்படும். உதாரணம் : உடுப்பது உம் உண்பது உம். இங்கே உடுப் பதும் உண்பதும் என நின்ருலும் ஒசை கெடாது. இருப் பினும் இனிய ஒசைக்காக அளபெடுத்தது. சொல்லிசை அளபெடை : ஒரு சொல் மற்ருெரு சொல்லாகத் திரிந்து அளபெடுப்பதும், பெயர்ச்சொல் எச்சப்பொருள் படும் பொருட்டு அளபெடுப்பதும் சொல்லிசை அளபெடையாம். உதாரணம் : தூஉய். இது தூவி என்னுஞ் சொல் தூஉய் எனத்திரிந்து அளபெடுத்தது. நசைஇ-இது நசை (விருப்பம்) என்னும் பெயர்ச் சொல் விரும்பி என எச்சப் பொருள்படும் பொருட்டு நசைஇ என அளபெடுத்தது. ஒற்றளபெடை ஒற்றெழுத்தும் சில சமயங்களில் மாத்திரை மிகுந்து ஒலித்து அளபெடுப்பதுண்டு. அதற்கு அறிகுறியாக அந்த ஒற்றெழுத்துக்களே அருகில் வரும். உதாரணம்: இலங்ங்கு வெண்பிறை. இதில், ங் என்ற மெய் யெழுத்து அளபெடுத்து வந்தது. அதற்கு அறிகுறியாக மற் ருெரு ங் என்ற ஒற்றெழுத்து இடப்பட்டுள்ளது. உருபுமயக்கம்: ஒரு வேற்றுமையுருபு வரவேண்டிய இடத்தில் மற்ருெரு வேற்றுமையுருபு வந்து மயங்கி நின்று, பொருள் வேறுபடாமல் நிற்பது உருபுமயக்கம். உதாரணம்: கிழங்கு மணலுக்கு ஈன்ற முளை. இது கிழங்கு மணலின்கண் ஈன்ற முளை என வரவேண்டும். மணலின்கண் என ஏழாம் வேற்றுமையுருபு வரவேண்டிய இடத்தில் நான்காம் வேற்றுமையுருபு வந்து மயங்கி நிற்கிறது. நின்ரு லும் பொருள் வேறுபடாமல் ஏழாம் வேற்றுமைக்குரிய இடம் பொருளையே தந்து நிற்கிறது. இது வேற்றுமை மயக்கம் என்றுஞ் சொல்லப்படும். போலி: ஒரு சொல்லில் ஒரெழுத்திற்குப் பதிலாக மற்ருேர் எழுத்து வந்து பொருள் வேறுபடாமல் நிற்பது போலி எனப்படும். மொழி முதற் போலி, மொழி யிடைப் போலி, மொழியிறுதிப் போலி என மூன்று வகைப்படும். உதாரணம்: அறன். அறம் என்பதில் ம் என்ற எழுத்திற்குப் பதிலாக ன் என்ற எழுத்து வந்து நின்று அதே பொருளைத் தந்தது. .