ஆம்
பசிப்பிணி மருத்துவன் .o.o.) 11. குடி முதலிய எல்லைகளைக் கடந்து நிற்கும் புலவர் குடிப்பெருமை கூறிச் சமாதனம் செய்வது முறை யாகுமா ? - குடி முதலிய எல்லைகளைக் கடந்து நிற்கும் நிலை புலமைக்கு உரியதே. ஆயினும் அம்மனப்பான்மை, எனது நாடு உனதுநாடு என மாறு கொள்ளும் அரசர்க்கு வாய்க்காது. அதனல் அரசர் பெரி தென மதிக்கும் குடிப்பற்றைக் கொண்டே அவர்களைத் திருத்த முயலுகிருர், அக்காலத்தரசர் குடிப்பற்று மிக்கவர் ; குடியின் சிறப்புக்கு அறிகுறியாகக் கொண்ட குடிப்பூவை உயிரெனப் போற்றியவர். அப்பூவை எவரும் பழித்துரைக்கப் பொறுத் திரார். இத்தகைய அரசரின் மனநிலையை நன்குணர்ந்த புலவர் அவர் போற்றுவனவற்றைக் கொண்டே அறிவுறுத்துகிருர். புல வர் நோக்கம் போரை நிறுத்த வேண்டும் என்பதே. ஆதலின்குடிப் பெருமை கூற முயன்றது அறம் பற்றிய நோக்கமே யாகும். மேலும் தான் விளங்க வேண்டும் என்னும் தன்னல நோக்கமே கொண்டவர்க்குக் குடி விளங்கும் நோக்கமேனும் வளரட்டும் என்று அறிவுரை கூறியது தகுதியறிந்து செய்த நன்முயற்சியே கபாகும. 8. பசிப்பிணி மருத்துவன் 1. பசி ஏன் தீப்பிணி எனப்பட்டது ? அது நீக்கும் மருந்து யாது ? உலகில் மக்களை உடற்றும் பிணி பலவற்றுள்ளும் பசிப்பிணி கொடியதாகும். அஃது ஒர் உடம்பினின்று, குடிப்பிறப்பழித்து, விழுப்பங்கொன்று, பிடித்த கல்விப்பெரும்புணே அகற்றி மற்றும் இன்ன பல தீமை செய்து, அதனால் மேல்வரும் உடம்புகட்கும் துன்பம் செய்வதாகலின், பசியென்னுந் தீப்பிணி எனத் தெய்வப் புலவராற் கூறப்பட்டது. அப்பிணிக்கு மருந்தாவது சோரும் நீரு மாகிய உண்டியே யாகும். 2. பண்ணன் வாழ்ந்த பதி எது அவன் இயல்பு யாது ? "ஒரு பிடிபடியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ எனச் சிறப் பிக்கப் பெறுஞ் சோளுட்டின் கண்ணே, வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியின் மருங்கு, சிறுகுடி என்னும் பதி யொன்று உளது. அப்பதியின்கண் ஆயிரத் தெண்ணுறு ஆண்டு களின் முன், பண்ணன் என்னும் நன்னராளன் ஒருவன் மிக்க படை யாண்மையும், மேம்படு கொடையாண்மையும் உடையய்ை வாழ்ந்திருந்தனன்.றண