பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


❖'இரண்டாம் புரட்சிக் கவிஞர்' எனும் பட்டம் மற்றும் 'இராணா இலக்கிய விருது’ பொற்குவை ரூ.10,000-தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு-1984

❖ ‘கல்வி உலகக் கவியரசு' விருது-அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடி-1996

❖ 'பொற்கிழி'-பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி-1997

❖'கலைமாமணி விருது' 'பொற்பதக்கம்'-செல்வி பாத்திமா பீவி, ஆளுநர்- கலைஞர் மு.கருணாநதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1998


பிற குறிப்புகள்

-> இளம் பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.

-> 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில.(1939)

-> 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடினார். (1940)

-> 21ஆம் அகவையில் இயற்றிய 'சாதி என்பது நமக்கு ஏனோ?' என்ற கவிதையே முதல்முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் 'திராவிட நாடு' இதழில் வெளியிடப்பட்டது. (1940)

-> தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)

-> தன்மான இயக்கத் தொடர்பால் ‘வித்துவான்' தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். (1943)

-> நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி. அங்கிருந்த சிறை வாழ்க்கையும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். (1944)

-> பெரியார் தலைமையில் அண்ணா முன்னிலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், மாநாட்டுத் தீர்மானம் முன் மொழிந்தார். அன்பழகன் வழிமொழிந்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு. (1945)

-> புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து 'வித்துவான்' பட்டம் பெற்றார். (1947)

-> சென்னையில் தமிழாசிரியர் பணி-பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி- 'பொன்னி' இதழில் 'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக' அறிமுகம்- திராவிட இயக்கத்தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49)

-> தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண்-சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள தாயாரிடம் வேண்டுதல், ஒரே மகன் என்பதால், இசைவு தரத் தாயார் மறுத்தல் (1948)