பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


21. தெய்வத் திருமகளே
கலி வெண்பா


பேருலகில் நான்குமொழி பெற்றாலும் இன்றுவரை
சீரிளமை குன்றாத தெய்வத் திருமகளே,
ஆடிப் பெருக்காலும் ஆர்த்த நெருப்பாலும்
வாடிச் சிதையாமல் வாழ்ந்து வருபவளே,
பொங்கிச் சினந்தெழுந்து போராட வந்தகடல்
சங்கத்து வைத்திருந்த சான்றோர்தம் ஏடுபல
கொள்ளைகொண்டு போனாலுங் கோலஞ் சிதையாமல்
உள்ள தமிழரசி ஒப்பில்லா வாழ்வரசி,
மூவேந்தர் ஆட்சி முடிந்தபினர் யார்யாரோ
கோவேந்தர் என்றிங்குக் கோலேந்தி வந்தவர்கள்
அவ்வவர்தம் தாய்மொழிக்கே ஆக்கங்கள் தந்தாலும்
செவ்வியநல் லாற்றல் சிதையாமல் நிற்பவளே
..........................................................................
..........................................................................

[தமிழ் முழக்கம்]

('ஊர்வலக்காட்சி' எனுந் தலைப்பில் பாடப்பெற்ற கவிதையிலிருந்து எடுக்கப்பெற்ற சில அடிகள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன.)