பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 155 அந்நூலுக்கு ஊன்றுகோல்’ எனப் பெயரிட்டு சன்மார்க்க சபையின் வாயிலாக வெளியிட்டார். எளிதில் எவருக்கும் அணிந்துரை எழுதும் இயல்பினரல்லாத அவர் சிறப்புப் பாயிரம் தாமாகவே எழுதி வெளியிட்டார். தமிழண்ணல், திறனாய்வு முறையில் மிகச் சிறந்த அணிந்துரை யொன்றெழுதி, எனக்கு அடியார் வண்ணம் பூசித் தம் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். வ.சுப. மா. எழுதிய சிறப்புப் பாயிரமும்தமிழண்ணல்எழுதியதிறனாய்வும்நூலுக்குஅணிசேர்க்கின்றன. மனிதனைத் தேடுகின்றேன் மக்கட் பண்பு அருகிவருவது கண்டு, மனம் நொந்து பாடிய என் பாடல்களைத் தொகுத்துக் கருவூர்த் தோழர்கள் மனிதனைத் தேடுகிறேன்' என்ற பெயரால் ஒரு நூல் வெளியிட்டனர். தவத்திரு குன்றக்குடி அடிகளார்.தலைமையில் வெளியீட்டுவிழாவும் நடத்தினர். முடியரசன் குறிப்பிட்ட ஒரு கட்சியில் உறுதியாக நிற்பதால் அரசு அவரைச் சிறப்பிக்கவில்லை. நீங்கள் அவருக்குச் சிறப்புச் செய்யுங்கள். இவர் என்னைவிடப் படித்தவர். நான் எழுதியதை விட நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். என்னை விடச் சிறந்த கவிஞர். ஆனால் எனக்கு விளம்பரம் அதிகம். அவருக்கு அது குறைவு’ என்று கவிஞர் சுரதா பேசினார். நெஞ்சு பொறுக்கவில்லையே நாட்டில் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடை பெறும் தீமைகளைக் கண்டு, மனம் வருந்திப் பாடியவற்றை 'நெஞ்சு பொறுக்கவில்லையே' என்றநூலாக என் செலவில் வெளியிட்டேன். ஆனால் அவை என் இல்லத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. அன்புள்ள பாண்டியனுக்கு திருக்குறட் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, கடித வடிவில் எழுதப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. இந்நூல் பாடநூலாக வெளிவந்தது. காப்பிய நாடகம் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் தம் முயற்சியால், ஆங்குள்ள தமிழியற் புலத்தில் ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் என்னைப் பணியில்