பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T74 கவியரசர் முடியரசன் படைப்புகள்-11 தங்களைக் கண்டதில், தங்களோடு பழகியதில் எங்கட் கெல்லாம் பெருமகிழ்ச்சி. பாவேந்தர் பரம்பரையில் மூத்து பாவலரைக் காணுகையில், அந்தத் தமிழ் உணர்வுகளை மறு முறையும் பெறுகின்றோம். அந்தப் புரட்சிப் போக்கை திராவிட மரபுணர்வை மறுமுறையும் உணர்கிறோம். பாவேந்தர் கருத்தரங்கிற் பேசிய தங்கள் பேச்சு உணர்வுள்ள பேச்சு என்பதை விட உணர்வின் உணர்வுகள் என்றே சொல்லலாம். அதை என்றும் புதுவை மறக்காது. தங்களைப் போன்ற பெரியோர்களைத் தமிழகம் சரிவரப் போற்றாமையாற்றான் இந்நாள் தமிழர்க்கு ஏற்றமில்ல்ை. எழுச்சிப் பாவலர் இலக்கியன், புதுவை - 2-6-81 <> <> * 'காலத்தால் அண்ணா எழுதிய எந்த எழுத்தும் நிற்கவில்லை. அந்தந்தக் காலத்தோடு அது இறந்து விட்டது. அவர் எழுதிய ஒரு புத்தகத்தைக் கூட இப்போது படிக்க முடியாது என்று கவிஞர் கண்ணதாசன், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதற்கு மறுப்புரைக்கும் வகையில், தமிழ் மறவன்' என்பவர், 1973 மார்ச்சு 5-இல் உரிமை வேட்கை" என்னும் இதழில் கட்டுரை எழுதி யிருந்தார். அக்கட்டுரையில் கண்ணதாசன் குழப்ப வாதங்களையும் நிலையற்ற போக்கையும் முரண்பாடு களையும் விளம்பரத் தன்மையையும் சுட்டிக் காட்டி எழுதியதிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி கீழே தரப்படுகிறது." 'தமிழ் நாட்டில் தலைசிறந்த, புகழ் வாய்ந்த கவிஞர்களாக இன்றைக்குக் கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, புலவர் பொன்னி வளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவரி களும் இவரைப்போல் இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் - சமயத்திற்கும் ஏற்றாற்போல எழுதக் கூடியவர்களாக் இருந்தால் எவ்வளவோ விளம்பரம் பெற்றிருப்பார்கள்." அவர்களெல்லாம். பாரதிதாசனைப் போலக் கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் கல்வி அறிவு ஒழுக்கமும் உடையவர்கள்.