பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நாவையே புகழ்ந்து போற்றி நல்விழா எடுப்பாள் பாட்டுப் பூவையே அணியும் நங்கை புகழுச்சி ஏற்றிப் பார்ப்பாள்; பாவைக்கந் நாள்கி டைக்கும் பாவல வணக்கம் ஐயா! ஆசிரியர் அன்பிற்கலந்த இளவல் 'காவியப்பாவை' கபிலவாணன் 28.12.74 என் உயிர்காத்த அண்ணல் சுப்பிரமணியனாரைப்பற்றிப் பாடிய பாடல்களைத் தென்றல் ஏட்டில் வெளியிட்டிருந்தேன். அப்பாடலில் மயங்கிய அன்பர் விடுத்த பாடல்களிற் சில: புதுக்கோட்டைத் தமிழ்ப்பெரியோன் சுப்ரமண்யப் புரவலனின் உயர்பண்பை, ஈகைப் போக்கை மதுக்கோப்பை யெனமயக்கும் சொற்கூட் டத்தால் வடித்துவிட்டாய் செய்ந்நன்றி. உன்றன் நெஞ்சில் எதுக்களித்து நிற்கும்நிலை கண்டு கொண்டேன் இதயத்தை வெளித்திறந்து காட்டி விட்டாய் புதுப்புனலின் நடைபோலக் குதிக்கும் உன்றன் பொற்கவிதைத் திரள்கண்டு பூரித் தேன்நான். தமிழ்பாடித் தமிழுக்கே பாடு பட்டுத் தமிழறிஞர் பலரிங்குத் தமிழர் நாட்டில் உமியாகி மண்ணாகி மடிந்தார்; ஆனால் உயிர்வாட்டும் பெருந்துன்பம்.உற்ற போது தமிழாளா! உன்னுடைய துயரம் போக்கித் தண்ணிழலும் பேரன்பும் தந்து நின்ற தமிழ்ப்பெரியோன் தனைப்புகழ்ந்து பாடல் சாலும் தக்கவனைப் புகழ்ந்துரைத்த நீயும் சான்றாய்! தேனி க.அனந்தப்பன்(அமரன்) 20.1.59 சுயராச்சிய பவனம்