பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - 181 தமிர்காக்கும் நற்கவிஞன் தன்னுழைப்பால் ஓங்கும் அமிழ்தன்னான் வாழ்க வளர்ந்து புலவர் தா.அழகுவேலன் சென்னை, 13-12-64 ஓடி வருஞ்சொற்கள் உற்றஇடத் தேயமர்ந்து கூடிப் பொருள்கொழிக்குங் கோலத்தால் - பாடிப் பெருங்காப் பியமளிக்கும் பெம்மான் முடியரசன் தருங்காப் பியமே தனி ரா. நடராசன், பி.ஏ ஆசிரியர் காரைக்குடி

    • * <

என் மணிவிழாவின் பொருட்டுத் தெசிணி அவர்கள் தாம் -- நடத்தும் கவிதை' என்னும் ஏட்டின் முகப்பில், என்றுமுள தென்றமிழ் போல் என்றும் இளைஞர் முடியரசன் வாழி'என்றெழுதி, என் உருவப் படமும் வெளியிட்டு வாழ்த்துப் பாவும் எழுதியிருந்தார். வளைந்திருக்கும் மேற்குமலைத் தொடர்ச்சி, மேலே மேய்ந்துதிரி கின்றமுகில் வரிசை கீழே விளைந்திருக்கும் வயற்காடும், இமைவா னத்தே விடுதலையாய்ப் பறந்திருக்கும் புள்ளும் சற்றே கலைந்திருக்கும் மேகலைபோல் ஒடும் ஆறும், . அதில்துள்ளும் கயற்கெண்டை மலர்கள் கூட்டம், முளைத்துவரும் துரைராசன் இவற்றைக் கண்டான் முடியரசன் எனுங்கவியைத் தமிழ்த்தாய் பெற்றாள் மாமதுரைப் பெரியகுளம்ஈன்ற இந்த மணிக்கவிதைச் சிறுமீனை இலக்கியத்துப் பாமதுரத் தீஞ்சாற்றைப் பருக வைத்துப் பருக்கவைத்தார் துரைசாமி அம்மான்காரர். தீமைகனைத் தீய்க்கவந்த ஈரோட்டாரோ