பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப்பயணம் 187 'MODERNITY என்று சொல்லப்படுகிற தற்காலத்தன்மை இவரது பாடல்களில் உண்டு. தான் வாழுங்காலத்தின் சமுதாயக் கொடுமைகளை அவர் கண்ணாடியாக நின்று காட்டுகிறார். வழைகள், தொழிலாளிகள் ஆகிய எல்லோர் மீதும் அவரது பரி வுணர்ச்சி பெருக்கெடுத்தோடுகிறது. இவரிடத்தில் கற்பனை விண்ணளாவித் திகழ்கிறது. தமிழிசை இயக்கத்திற்கு முடியரசன் செலுத்தியிருக்கும் பங்கு மிகப் பெரியது. ஆவி கலந்த அழகி" 'ஆடினாள் போன்ற பாடல்கள் முத்துத்தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதியார், கவிகுஞ்சர பாரதியார் போன்ற கீர்த்தனாசிரியர்களை நமக்கு நினைவூட்டு கின்றன. முடியரசன் சாதனைகளில் முடிமணியாகத் திகழ்வது 'பூங்கொடி" என்னுங் காப்பியமாகும். இருபதாம் நூற்றாண்டில் எழுந்த புதிய காப்பியங்களில் இதற்குத் தனியிடம் உண்டு. தமிழ் நாட்டில் எழுந்த இந்திப் போராட்டத்தைப் பின்னனியாகக் கொண்டு இது புனையப்பட்டது. இக்காவியத்தை உலகத்தின் மூன்றாவது தேசியக் காப்பியம் எனலாம். உலகத்தின் முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம். இரண்டாவது போர்த்துக் சிேய நாட்டுக் காவியம். மூன்றாவது இந்தப் பூங்கொடி. ஒரு காவியத்திற்குரிய தன்மைகள் அனைத்தும் இதன்கண் அடங்கி உள்ளன. மணிமேகலையைத் தழுவிச் செல்வது என்ற ஒரு குறையைத் தவிர வேறொன்றும் இதில் சொல்வதற் ல்ெலை. ஒரு நாற்பதாண்டுக்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றினை அது சுவைபட எடுத்துக் காட்டுகிறது. இக்காவியம் தமிழுக்குக் கிடைத்த ஒரு பெறற்கரும் செல்வம் எனலாம். * -தாமரை ஏப்பிரல் 67 壘 壘 ஆ *్య• ** ** கு. சின்னப்ப பாரதி என்பார். தாமரை இதழில் முடியரசன் கவிதைகள்' என்ற தலைப்பில் எழுதியிருந்த திறனாய்வுக் கட்டுரையி லிருந்து சில பகுதிகள்: 'பாரதிக்குப் பின் நீண்ட கிளைகளையும் விழுதுகளையும் விட்டு நிற்கிற பெரும் மரம் பாரதிதாசன்தான். அந்த