பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. திப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 203 'இலக்கியம் வாழ்க்கை முழுவதும் விளக்கும் கண்ணாடியாக அமையா விடினும் கவிஞன் வாழும் காலக் கண்ணாடியாக அமைவதே சிறப்பு. அதனுடன் கவிஞன் காணும் வாழ்க்கையும் இணைந்து, இலக்கியம் பிறக்கும் போது புது மெருகேறும். முரு கவிஞன் எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு காண வெண்டும் என்ப தில்லை. குறிப்பிட்ட சில சிக்கல்களுக்குக் கவிஞன் முடிவு காணாமல் விட்டு விடக் கூடாது." பூங்கொடி மொழிக்கொரு காப்பியம் என்று பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தாழ்வுற்ற நசிந்த தமிழருக்குப் புதிய வழுச்சியையும் உணர்ச்சியையும் ஊட்டக் கவிஞர் விழைந் துள்ளார். பூங்கொடி முழுக்க முழுக்க மணிமேகலையின் சாயலைக் கொண்டு தான் பிறந்துள்ளாள். தமிழ் சிறக்க இளமையைத் துறந்து, துயரினை ஏற்கிறாள். பூங்கொடியின் வாழ்க்கையில் வற்படும் இன்னல்கள் தற்காலத்தைக் கருத்தில் கொண்டு lட்டப் பட்டுள்ளன. - - ட, தி திருச்சி வானொலியில் 4-9-65இல் ஒலிபரப்பான பதிப்புரையின் பகுதி: தமிழுக்காகவே வாழ்ந்து மடிகின்ற பெண்ணொருத்தியின் வரலாற்றைச் சிறந்த முறையில் உயர்ந்த கவிதை நடையில் வதுகைமோனை அழகுகள் பொருந்திவர ஆசிரியர் இயற்றி யுள்ளார். துறவுள்ளம் இளமையிலேயே மேற்கொண்டு, குன்றுறை அடிகளார் குறளகம் புகுந்து, தமிழ்த் தொண்டு கலைத் தொண்டு ஆகியன செய்து, தமிழுக்கெனவே மறியல் செய்து, ைெறப்பட்டு மடிகின்றவள். காவியத்தின் தலைவி பூங்கொடி, இந்நூலினுள் உவமைகள் பாங்குற எடுத்தாளப் பட்டுள்ளன. ஒசை நயம் மிகுந்த பகுதிகள் பல இந்நூலகத்து உண்டு. இயற்கைக் காட்சி வர்ணனைகள் எழிலுறத் தரப்பட்டுள்ளன. பூங்கொடி தவிர எழிலி, சண்டிலி, மீனவன், தாமரைக்கண்ணி, அருள்மொழி ஆகிய பாத்திரங்களும் நன்கு படைக்கப்பட்டுள்ளன.