பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 இயல்பால் ஒத்திருந்தது போலவே உருவத்தாலும் ஒத்திருப் போம். காண்போர் என் இளவல் என்றே அவரைச் சொல்வர். அந்த அளவிற்கு உருவ ஒற்றுமையுண்டு. என்பால் நெகிழ்ந்து பழகுவார். புதுக்கோட்டையிலிருந்து வரும்பொழுதெல்லாம் எனக்குச்சட்டைத் துணிகள் கொணர்வார். ஒரு சமயம், குழந்தையாக இருந்த என் மகள் கழுத்துச்சங்கிலியை மாற்றிச்செய்ய ஒருவரிடம் கொடுத்திருந்தேன். மாற்றிச் செய்பவரி ஏமாற்றிச்சென்றுவிட்டார். அப்பொழுது வந்திருந்த என் மனைவியின் அன்னையார் நான்தான் விற்று விட்டேன் என்று, என் மீது வருத்தப்பட்டிருக்கின்றார் சீ.ப.சுப்பிரமணியமும் அதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றேன். குழந்தையின் கழுத்திற் சங்கிலி இருக்கக் கண்டு உன் அன்னையார் வாங்கி வந்தாரா? என என் மனைவியை வினவினேன். இல்லை, மாற்றிச் செய்ய வாங்கியவர் கொடுத்தாரென்று நம் சுப்பிரமணியம் கொண்டு வந்து கொடுத்தார்’ என்று மனைவி கூறினார். சுப்பிரமணியம் அவ்வாறே கூறினார். சில நாள் சென்றபின் நானும் சுப்பிரமணியமும் ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தோம். கடைக்காரர் என்ன? சங்கிலி பிடித் திருந்ததா? வீட்டார் என்ன சொன்னார்கள் என்று வினவ, சுப்பிர மணியம் விழித்தார். நான் துருவித் துருவி வினவியபின் உண்மை வெளியாயிற்று. என் மாமியார் வருந்தியது கேட்டுப் பொறாமல் சுப்பிரமணியமே சங்கிலி வாங்கிக் கொடுத்திருக்கிறார். நான் கவிதையெழுத அமர்ந்துவிடின் அதற்கு வேண்டிய அனைத்தும் முன் கூட்டியே ஏற்பாடு செய்துவிடுவார். அவர் தொடர்ந்து என்னுடன் இருந்திருப்பின் எவ்வளவோஎழுதியிருப்பேன்; நான் எழுதுவதெனில்துண்டுகோல் வேண்டும். அவர் செவ்வையான துரண்டுகோல். அவர் காதல் மணம் செய்து கொண்டவர். இருவரும் உடன் போக்காக வந்து காரைக்குடியில்தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். என் இல்லத்தில் தங்கியிருந்தனர். அவர்.துணிக்கடை தொடங்கினார். வணிகம் நன்கு நடைபெறாமையால் நிறுத்தி விட்டார். அவர் மனைவி மேரிக்கு ஆசிரியர் வேலைக்காக