பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 24 | வந்தன. அவர் எடுத்துப் பற்ற வைத்தார், அவர் வெண்சுருட்டு பிடிப்பதே தனிவகையாக இருக்கும். மற்றவர் பிடிப்பதுபோல் இராது. எல்லா விரல்களையும் மடக்கி வைத்துக் கொள்வார். இருவிரலிடையே வெண்சுருட்டுப் புகுந்திருக்கும். கட்டை விரல் பக்கம் வாய் வைத்து உறிஞ்சுவார். இவ்வாறு மூச்சடக்கி, ஒரு தடவை உறிஞ்சி ஊதிவிட்டுப் பக்கத்தில் நின்றாரை நோக்கி, சிகரெட்டுக் குடிக்கணும்னு தோணுச்சு, உள்ளே குடிச்சா நம்ம கிழவன் சத்தம் போடுவாரு கிழவனுக்குப் பயந்து வெளியே வந்திட்டேன்' என்று சொன்னார். பெரியாரைத்தான் நம்ம கிழவன் என்று குறிப்பிட்டார். தேவர்மன்றத்திலும் தென்னுரிலும் நிகழ்ந்த இருநிகழ்ச்சிகளாலும் புரட்சிக் கவிஞர், பெரியாரிடம் எவ்வளவு மதிப்பும் பற்றும் வைத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். இம் மாநாட்டிலும் கவிஞர் பேசினார். புராணக் கதைகளையெல்லாம் பிய்த்து உதறி விட்டார். புரட்சிக் கவிஞரின் பேச்சு என்பாட்டுணர்வில் ஒரு புதிய ஒளியைத் தோற்றுவித்தது. அப்பொழுதுதான் கவிஞரை எனக்கு வழிகாட்டியாக ஒரு திருப்பு முனையாக என் மனத்திற் பதிய வைத்துக் கொண்டேன். 1944ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரிக்குப் பயிலச் சென்றிருந்தேன். என் கொள்கையைத் தெரிந்துகொண்ட அவர்கள்; என்னைச்சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். இவ்வளவு தொலைவு வந்தோம்; புரட்சிக் கவிஞரைப் பார்த்து விட்டுச் செல்வோம் என்று கருதிப் புதுச்சேரிக்குச் சென்றேன். கவிஞரின் இல்லத்துக்குச் சென்று ஐயா என அழைத்தேன். உள்ளிருந்து ஒரு சிறுமி வர, கவிஞரைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். அப்பா வெளியூர் போயிருக்கிறார் என்ற விடைவந்தது. வருத்தத்துடன் திரும்பினேன். 'இருங்கள் சாப்பிட்டு விட்டுப் போகலாம்; அதற்குள் அப்பா வந்தாலும் வந்துவிடுவார் என்று சிறுமியிடமிருந்து அன்பழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், கவிஞரைக் காணப் பெறா வருத்தத்துடன் மீண்டுவிட்டேன். என்னை உணவருந்தச் சொன்ன அச்சிறுமி தான் இன்றைய வசந்தா தண்டபாணி. 1947-49ஆம் ஆண்டுகளில் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நான் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்ருந்தேன். அப்பொழுது புதுக்கோட்டையில் முருகு சுப்பிர