பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 243 வேர்விட்டு விழுதுவிட்டு நிற்கும் ஆல் போல் நிலைத்திருக்கும். இதைப் பலமுறை கண்டிருக்கிறேன். சென்னையில் பலமுறை கவிஞரைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது டிராம் என்ற வண்டிகள்தாம் நகருக்குள் ஒடும். அந்த வண்டியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வண்டியில் அமர்ந்தும் சில வேளைகளில் நின்றும் பயணம் செய்வார். அப்பொழுதெல்லாம் அருகில் இருப்பவருடன் பேசியதையோ சிரித்ததையோ பார்த்த தில்லை. ஏதோ கற்பனை செய்து கொண்டு, படம் பார்த்துக் கொண்டிருப்பவர் போல அசையாமல் இருப்பார். வண்டியிலிருந்து இறங்கும்போது ஒரு காலைத் தரையில் ஊன்றி இறங்கமாட்டார். குழந்தைகள் குதிப்பது போல இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு அப்படியே குதிப்பார். ஒருமுறை கவிஞர் வாணிதாசனைக் கண்டு வரப் புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் வா வாத்தியாரைப் பார்த்து வரலாம் என அழைத்தார். (புரட்சிக் கவிஞரை, வாத்தியார் என அழைப்பது புதுவை மக்கள் பழக்கம்) நான் உடன்வரத் தயங்குவதைக் கண்டுகொண்ட வானியண்ணன் "வா சும்மா போய் வருவோம்' என்றார். நான் வர மறுத்தேன். ஏன் என்று வற்புறுத் தினார். 'முருகு' என்ற இதழில் நான் ஒரு கதை எழுதினேன். அதைப் பாரதிதாசன் பார்த்திருக்கக் கூடும். அதனால் நான் வர விரும்ப வில்லை என்றேன். கதைக்கும் அவரைப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? சும்மா வா போய் வருவோம்’ என்றார். அண்ணே, புரட்சிக்கவிஞரைப் பற்றித்தான் கதை எழுதியிருக் கிறேன். புராணக் கதைகளையெல்லாம் கண்டித்து - கடிந்து பேசி நமக்கெல்லாம் ஒரு புதுநெறி காட்டிய நம் கவிஞர், புராணக் கதைகளுக்கு - அந்தத் திரைப்படங்களுக்கு உரையாடல், பாடல் எழுதிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வேதனை தருகிறது. அவ்வேதனை அடிப்படையில், அவர் போக்கை எதிர்த்து, அழிந்து விடுமோ? என்ற தலைப்பில் கதையெழுதியிருக்கிறேன். புரட்சிக் கவிஞரை எதிர்த்து எழுதியதால் பலருக்கும் விளம்பரம் ஆகிவிட்டது. கவிஞரும் அதைப் படித்திருக்கக் கூடும். அவர்தான் முரட்டுப் போக்குடையவராயிற்றே. நம்மைச் சீறினும் சீறலாம். அதனால் அங்கு வர எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னேன்.