பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 257 மறுத்தவுடன் வேகங்கிளம்பி விட்டது. ம்ம், அப்படிக் கேளு’ என்று கூறிக்கொண்டே தொங்கவிட்ட கால்களை மடக்கிக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறினார். உரை கூறிய குறட்பாக்கள் நினைவில் நில்லாது போயின. அப்பொழுது அவர் மேற்கோள் காட்டிய பாடல்களும் திவாகர நிகண்டுப் பகுதிகளும் அளவிறந்தன. இவ்வளவு மனப்பாடம் செய்திருக்கிறாரே என்று வியப்படைந் தோம். “சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ? என்ற பாடற்பகுதி, அக்காலத்தே எங்கும் பேசப்பட்டது. இது பாவேந்தர் பாட்டென்பது பலர் எண்ணம். பேராசிரியர் ஆ.முத்து சிவன் என்பார் தமது நூலொன்றில், இப்பாடல் பாவேந்தர் பாடலென்று கூறித்தாக்கியெழுதியிருக்கிறார். பாரதிதாசன் நூல்களில் இப்பாடல் யாண்டும் இடம் பெறவில்லையென்பதை நான் அறிவேன். எனினும் பாவேந்தரிடம் கேட்டுப் பார்ப்போம் எனக்கருதி, ஐயா, சீரங்கநாதன்' எனத் தொடங்கும் பாடல் உங்களு டையதா? என்று வினவினேன். அது என்பாட்டில்லப்பா, எவனோ நல்லாப்பாடியிருக்கிறான்' என்று சிரித்துக் கொண்டார். இது 1956ஆம் ஆண்டு நிகழ்ந்ததென்று கருதுகின்றேன். ஆண்டு பல ஆகிவிட்டமையால் மீண்டும் ஒரு திங்களுக்கு முன் கவிஞர் மன்னர் மன்னனுக்கு எழுதிக்கேட்டேன். "சீரங்கநாதரையும்... என்று தொடங்கும் பாடல் வரி பாவேந் தருடையதன்று. நாகை அம்மையப்பன் பாடலில் வருகிறது. அப்படி இது குறித்தும் நான் ஆதாரம் தேடி இருக்கிறேன். என்று 26-7-1987ல் மன்னர் மன்னன் மறுமொழி எழுதியிருந்தார். பாவேந்தர் பாடல்களிற் காணப்பெறும் வேகத்தையறிந்த பலரும், கடவுளர். பீரங்கியால் பிளக்கப்படும் பாடலும் அவருடையதாகத்தானே இருக்கும் என்று மயங்கிவிட்டனர். சிலருக்கு இன்னும் அம்மயக்கந் தீரவில்லை. o ■ பிறகு ஒரு பதிப்பகத்தாரைப் பற்றிப் பேசத்தொடங்கினார். கவிதை நூல்களை அழகாக வெளியிட வேண்டும்; அப்போது தான் கவிதையின் பெருமையும் அதிகமாகும். மோசமான தாளில்