பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 ஒருவர்.அவர்பாடும்பொழுது மனிதன்கடவுளை நினைக்கமாட்டான். துன்பம் வந்தால் உடனே நினைப்பான். கடவுள் நம்பிக்கையில்லாத தலைவர் (முடியரசன்) கூட நோய் வாய்ப்பட்ட பின்புதான் கடவுளை நம்பியிருப்பார் என்று கூறினார். நான் முடிப்புரையில், ஆம் நான் குருதியுமிழும் கொடுநோய்க்கு ஆளானதும் உண்மை. என்னைக் காப்பாற்றிய சுப்பிரமணியத்தையும், இராமச்சந்திரனையும் நம்பியதும் உண்மை என்று கூறினேன். சோமசுந்தரத்திற்கு முகம் மலர்ந்தது. முடியரசன் நம்ம வழிக்கு வந்துவிட்டாரே என்பது அவர் நினைப்பு. மீண்டும் பேசினேன். நான் கூறிய சுப்பிரமணியமும் இராமச் சந்திரனும் சோமசுந்தரம் நினைக்கும் கடவுளர் அல்லர். புதுக் கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர். பு.அ.சுப்பிரமணியனாரும் மருத்துவப் பேரறிஞர் வி.கே.இராமச்சந்திரனாரும் ஆவர். அவர்களை நம்பினேன். அவர்கள் என்னைக் காப்பாற்றினர் என நான் கூறியதும் சோமசுந்தரம் ஏமாற்றம் அடைந்தார். அரங்கில் அவ்வை மதுரை எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கில் நான் கலந்து கொண்டேன். அந்நாளில் வணக்கம் என்று சொன்னாற் போதும். சொல்வோரைத் தி.மு.க என்று கூறிவிடுவர். தி.மு.க என்றால் இந்நாட்டில் இருக்கத்தகாதவர்கள் போலவும் தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தம் போலவும் பலர் கருதி வந்தனர். இக்கருத்தை மனத்திற்கொண்டு வணக்கம் என்றால் உடனே தி.மு.க. என்கிறீர். முத்தமிழும் தி.மு.க. சொத்தா என்ன? முளைத்தபிற கட்சிகளில் தமிழ ரில்லை? என்று வினாப் பொருளிற் பாடினேன். எதிரில் அமர்ந்திருந்த பேராசிரியர் அவ்வை. சு.துரைசாமிப்பிள்ளையவர்கள். உணர்ச்சி வயப்பட்டு எழுந்து பிற கட்சிகளில் தமிழர் இல்லை, தமிழர் இல்லை என்று உரத்துக் கூவிவிட்டார். அண்ணாவின் அடக்கவுணர்வு மதுரை எழுத்தாளர் மன்றத்தில் மற்றோர் ஆண்டும் தலைமைப் பொறுப்பேற்றேன். பேரறிஞர் அண்ணாவும் மேடையில் அமர்ந் திருந்தார். அதனால் அண்ணாவைக்குறித்துப்பாடவேண்டியிருந்தது.