பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 வாராப் புகழ் காரைக்குடியிற் கம்பன்திருநாள். தலைமைப் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. கவியரங்கம் நிறைவுபெற்றபின் வெளியில் வந்தேன். வாயிலில் நின்று கொண்டிருந்த ஒருவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு உங்கள் கவிதைகள் அருமையாக இருந்தன. நேற்றிரவே நான் சென்னைக்குச் செல்ல வேண்டியவன். நம்ம ஞானசம்பந்தம் வற்புறுத்தி இருக்கச் செய்துவிட்டார். காலையில் முடியரசன் கவிதைகளைக் கேட்டு விட்டுப் போகலாம். அவ்வளவு அழகாகப் பாடுவார் என்று கட்டாயப் படுத்தி விட்டார். இருந்தது நல்லதாகப் போய்விட்டது. இதோஊருக்குப் புறப்படுகிறேன் என்று அளந்தும் விரைந்தும் பேசினார், மிக்க மகிழ்ச்சி. உங்களை யாரெனத் தெரிந்து கொள்ளலாமோ? என்றேன். தினமணியிலிருக்கிறேன். சிவராமன் என்று விரைந்து விட்டார். ஆம். தினமணி' ஆசிரியர் ஏ.என். சிவராமன் அவர்கள் தாம். சென்னைக்குச் செல்ல வேண்டியவர், பயணத்தை நிறுத்தி விட்டுத் தங்குகிறார் சிவராமன். தங்கிச்செல்லுமாறு வற்புறுத்துகிறார் பேராசிரியர் அ.ஞானசம்பந்தனார். இருவரும் என் கருத்திற்கு எந்த அளவு ஒத்து வருபவர்கள்? அவர்கள் பாராட்டுகின்றனர்; புகழ் கின்றனர் என்றால் அது வாராப் புகழ்தானே! போர் தொடுத்த பூவையர் தஞ்சையில் ஒரு கவியரங்கம். திரு.வி.க. நாள் கொண்டாடப் பட்டது. அந்நாளை மகளிர் நாளாகக் கொண்டாடினர். பெண் இணுரிமைக்காகப் பாடுபட்ட பெருமகனார் நாள் மகளிர் நாளாகப் கொண்டாடப்பட்டது பொருத்தமே. கவியரங்கம் கருத்தரங்கம் என ஏற்பாடுசெய்திருந்தனர். கவியரங்கு என் தலைமையில் நிகழ்ந்தது. கருத்தரங்கு இராசம்மாள் தேவதாசு (கோவை.அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்) என்னும் அம்மையார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றன. திரு.வி.க. அவர்கள் எழுதிய பெண்ணின் பெருமை: என்னும் நூலை நன்கு படித்துவிட்டு, அவர்தம் கருத்துகளை மனத்திற்