பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 ஆருயிர் தங்கு மேனும் எண்ணவும் செய்யா துள்ளம் ஏழையாம் இழிந்த சொல்லை. மக்களின் கல்விக் காக மனம்மிக மாழ்கும் போது தக்கவர் அன்போ டந்த மயக்கினைத் தவிர்ப்ப துண்டு சிக்கனம் அறியா என்றன் சிந்தனை கலங்கு மேனும் பொக்கையாய் ஏழை யென்று புகலுதல் அறவே செய்யேன். வாழ்வினில் துயர வெள்ளம் - அலைத்திட வந்து பன்னாள் சூழ்வதும் உண்டு; பண்பர் தூயநற் றொண்டர் அன்பர் தாழ்விலா அளியர் என்னைத் தாங்கிடத் தாமே வந்து சூழ்பவர் உண்டென் றாலும் சொல்லிடேன் ஏழைச் சொல்லை. பணவரு வாயிற் பற்றாக் குறையெனைப் பற்றும் போது துணையென நட்டார் வற்றா அருளுடன் தோள்கொ டுப்பர்; தணலென நிரப்பு வந்து தனியெனைத் தகைத்துத் தாக்க அணுகினும் ஏழை யென்றால் அரசன்யான் ஏற்ப தில்லை. (நிரப்பு - வறுமை)