பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 61 புத்தகத்தில் ஒரு பாடத்தைச் சுட்டிக் காட்டி, இந்தப் பாடத்தை நடத்துகிறேன். ஏனைய பாடங்களை நடத்துவது போலவே இதையும் மாணவர் உள்ளத்திற் பதியுமாறு நடத்துகிறேன் என்று கூறினேன். - அப்பாடம் இந்தி கூடாது என அ.கி. பரந்தாமனார் எழுதிய பாடம். தலைமையாசிரியர் அதைப் படித்து விட்டு, சாதி மறுப்புப் பாடலைக் கரும்பலகையில் எழுதுகிறீர்களாமே?’ என்று மீண்டும் வினா எழுப்பினார். அதே பாடப் புத்தகத்திலிருந்த வள்ளலார் பாடலைக்காட்டி, இதைத்தான் எழுதுகிறேன் என்று விடைகூறினேன். "சரி, சரி; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்; சுயமரியாதைக் காரர்களை உன் பள்ளியில் வைத்து வளர்க்கிறாயாமே என்று கல்வியமைச்சர் என்னைக் கேட்டார்; இக்குற்றச்சாற்று, நான் கல்வியதிகாரியாகப் பதவியுயர்வு பெறுவதற்குத் தடையாக அமைந்து விட்டது என்று கூறினார். உங்கள் உயர்வுக்குக் குந்தகம் ஏற்படுகிற தென்றால் நானும் விழிப்பாக நடந்து கொள்கிறேன் என்று கூறி விடை பெற்றேன். கல்வியமைச்சர் கலந்துரையாடல் கல்வியமைச்சரால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சமூக அறிவு பாடம் பற்றிக் கலந்துரையாட விழைந்து, அவினாசி லிங்கனார் ஆசிரியர்களை அழைத்திருந்தார். கூட்டம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்றது. அமைச்சருக்கு எதிரில் போடப்பட்டிருந்த பலகையில் நான், அழகுவேலன், திருமாவளவன் மூவரும் அமர்ந்தோம். வலப்பக்கத்தில் திருஞான சம்பந்த முதலியார் என்ற பெரியவர்திருநீறு பொலியும் நெற்றியுடன் அமர்ந்திருந்தார். தலைமையாசிரியர்கள், ஆங்கிலம் முதலிய பாடங் கற்பிப்போரெல்லாம் பின் வரிசையில் அமர்ந்தனர். முன் வரிசையில் அமர வேண்டாமென எம்மையும் அச்சுறுத்தினர். நம் அமைச்சர் முன் அமர ஏன் அஞ்ச வேண்டும்? என்று கூறி நாங்களும் அமர்ந்து விட்டோம். ஆங்கிலத்திற் பேசவா? தமிழிற் பேசவா?’ என அமைச்சர் வினவினார். ஆசிரியர் எவரும் வாய் திறக்கவே இல்லை. மீண்டும் அவர் வினவ, நான் எழுந்து, தமிழிற் பேசுமாறு வேண்டினேன். தெலுங்கு பேசுவோர் இருப்பார்களே அவர்களுக்குத் தமிழ்