பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== / IZ8] கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 கோன். கடம்பன், போரில் தோல்வியுற்ற செய்தியறிந்து வருந்திய பாண்டியன், அமைச்சரும் புலவரும் ஆறுதல் கூறத் தேறுகிறான். புலவர், கடம்பனை ஐயுறுகிறார். அமைச்சர் மறுக்கிறார். இறுதியில் வழுதி தலைமையில் படை புறப்படுகிறது. கடம்பன் தங்கை சுரும்பார் குழலியும் அவனை ஐயுறுகிறாள். வஞ்சி நாட்டவர் பலமுறை வருவதும் கடம் பனுடன் தனித்து உரையாடுவதும் அவளுக்கு ஐயத்தை ஏற்படுத்தின. அவன் மறுத்துரைத்தும் அவள் நம்பவில்லை. இறுதியில் அவன் சென்று விடுகிறான். எல்லைப்போருக்குச் சென்ற வழுதி வெற்றிகொண்டு, வஞ்சிநாட்டுப் படைத்தலைவன் விறல்வேளைச் சிறை செய்து, பாண்டியன் முன் நிறுத்துகிறான். படையின் மறைகளைப் புரோகிதன் கணியன்நம்பிதான் காட்டிக்கொடுத்தான் என்பது விறல்வேள் வாயிலாக வெளிப்படுகிறது. கணியன் நாடு கடத்தப்படுகிறான். உண்மையறிந்த குழலி வருந்திப் பொறுத் தருள வேண்டுகிறான். குழலியை வழுதிக்கு மணம் முடிக்கக் கடம்பனிடம் பாண்டியன் ஒப்புதல் கேட்கிறான். இந்நிலையில் கடாரத்தரசன் சீயன், திறைகொடுக்க மறுத்துப் போருக்கு அணியமாகிறான் என்ற செய்தி பாண்டியனுக்கு எட்டுகிறது. சினந்தெழுந்த பாண்டியன், வழுதி கடம்பன் இருவரையும் கடாரத்தின்மீது படையெடுக்கப் பணிக்கிறான். சியனொடு பொருதுவென்று மீளுங்காற் கடலிடைப் பெரும்புயலெழுந்து தாக்கக் கலங்கவிழ, இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்தான் என்ற செய்தி, பாண்டியனைக் கவலைக்கடலுள் வீழ்த்தியது: மாறன் மாதேவியை நலிய வைத்தது: குழலியின் உயிரைக் கவர்ந்தது. தங்கையின் பிரிவாற் கடம்பனும் நோயில் வீழ்ந்தான். - கவலையில் ஆழ்ந்த பாண்டியனுக்கு நாகனார் நிலை யாமை கூறி ஆற்றுவித்துப் போரின் விளைவுகளை - கொடுமை களை விளக்கிப் போரொழிந்த புத்துலகு காண வழிகள் மொழிய, அவனும் இசைந்து, அதற்குரிய நெறிகளைப் புலவர்பாற் கேட்டறிந்து, போரையொழிக்க முயல்கிறான். _ஆகுஅ