பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

முதற் குலோத்துங்க சோழன்

வந்தனர். அரசனும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங்கால் கோயில்கள் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்து வருவது வழக்கம்.[1] கோயிற்குரிய செலவு போக எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டு வந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.[2] ஒரு பகுதி மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப்பட்டது என்பது செங்கற்பட்டு ஜில்லாவி லுள்ள திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால் அறியப்படுகின்றது.[3]


  1. 19. S. I. I. Vol. III. Ins. Nos. 49, 57 & 66.
  2. 20. Ins. 333, 335 & 343 of 1918 (Madras Epigraphical Report.)
  3. 21. The Historical sketches of Ancient Dekhan page 336,