பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுரை

103

லும் அழிக்கப்பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டுவந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களும், வெட்டப்பெற்ற பேராறுகளும், கட்டப்பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடையனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம்.

முற்றும்
------