பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

51

தன. அவற்றைக் கண்டோர் பலரும் வியப்பெய்தி, இவை கடலைக் கலக்குங்கொலோ ? மலையை இடிக்குங்கொலோ ? ஒன்றும் அறிகிலம் ; இவற்றின் எண்ணம் யாதோ?' என்று ஐயுற்று நடுக்கமுற்றனர். நாற்றிசைகளும் அதிர்ந்தன. தூளிப்படலம் பிறந்தது. பல்லவர் கோனாகிய கருணாகரன் வளவர் பெருமானோடு களிற்றின் மீது இவர்ந்து இரைவேட்ட பெரும்புலிபோற் பகைமேற் சென்றனன். பாலாறு, பொன்முகரி, பழவாறு, கொல்லியெனும் நாலாறுந் தாண்டிப் பெண்ணையாற்றையும் கடந்து தொண்டைமான் படைகள் சென்றன ; அதன் பின்னர், வயலாறு, மண்ணாறு, குன்றியென்னும் ஆறுகளையுங் கடந்து கிருட்டினை நதியும் பிற்படுமாறு போயின; பிறகு, கோதாவரி, பம்பாநதி, கோதமை நதியென்னும் இவற்றையுங்கடந்து கலிங்கநாட்டையடைந்து, சில நகரங்களில் எரிகொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின.

இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், 'ஐயோ, மதில்கள் இடிகின்றனவே ; வீடுகள் எரிகின்றனவே ; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே ; அரண் எங்குளது?. நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர் ? படைகள் வருகின்றன ; அந்தோ ! நாம் கெடுகின் றனம்! மடிகின்றனம் !!' என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் 'ஐயோ ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அட்மன்னனது படையே போலும் ; அந்தோ! இனி என் செய்வது!' என்றலறிக்கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும்