பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முதற் குலோத்துங்க சோழன்

திருப்பணிகள் பல ; அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால்மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாமகோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாகவல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாகவிட்டிருக்கின்றனன். சமயகுரவருள் ஒரு வராகிய திருநாவுக்சரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந்தொண்டுகள் பலவாகும். அங்குக் காம கோட்டம் எடுப்பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச்சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலிவிடுத்தும் செய்த அருந்தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தியின் மாட்சி இத் தகையதென்று நன்கு புலப்படுகின்றதன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும்பணிகளுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப் பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையேயாகும்.[1]' இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந்தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம்பதியிலும் திருவதிகையிலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன.[2]

இவன், விக்கிரம சோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலையிலே இருந்தனன் என்பது விக்கிரம சோழன் உலாவடிகளால் புலனாகின்றது.[3]


  1. 7. S. I. I. Vol VI. No. 225 [தொகுதி 23
  2. 8. Ins. No. 369 of 1921; M. E. R. 1922; செந்தமிழ்த்
  3. 9.விக்கிரமசோழனுலா- கண்ணிகள் 78, 79.