90
முதற் குலோத்துங்க சோழன்
தேயம், பட்டவிருத்தி எனவும் அறநிலையங்கட்கு விடப்பெற்றவை சாலாபோகம் எனவும் வழங்கப் பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும்.
8. நாணயங்கள்:- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப்பெற்ற காசுகள் வழங்கிவந்தன. இக்காசுகளுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரிய நூல் ஒன்று எழுதியுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந்துள்னர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன் றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பெற்ற துளைப் பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.[1]
9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல்,எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறைகல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம்
- ↑ 11. (a) - I. I. Vol. III. No. 96. (b) 1)0. page 229 Foot -note: