பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

முதற் குலோத்துங்க சோழன்

முகத்தல் அளவை :-

5 செவிடு = 1 ஆழாக்கு

2 ஆழாக்கு = 1 உழக்கு

2 உழக்கு = 1 உரி

2 உரி = 1 நாழி

8 நாழி = 1 குறுணி

2 குறுணி = 1 பதக்கு

4 குறுணி = 1 தூணி.

12 குறுணி = 1 கலம்.

10. கிராமசபை :- நம் குலோத்துங்கன் காலத்தில் ஊர்கள் தோறும் சபைகள் இருந்தன. இச்சபை பின்ரே அங்கு நடைபெறவேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றிவந்தனர். சுருங்கச்சொல்லுமிடத்து அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடத்தப்பெற்று வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் கிராமத்திலுள்ள பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் ஆவர். அக்காலத்தில் தனியூர்களும் பல சிற்றூர்களடங்கிய சதுர்வேதி மங்கலங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வோர் உறுப்பினரே தேர்ந்தெடுக்கப்பெற்றனர். செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளையுடையதாகவும் தஞ்சாவூர் ஜில்லாவில் செந்தலை என்று தற்காலத்து வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்-