பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கள் தோன்றலாயின. இவற்றை "நாலு காசு நூலகம்" என்னலாம். அஃதாவது, இந்த நூலகங்கள். நாலு காசு கொடுப்போர் அனைவருக்கும் நூல் வழங்கிவந்தன என்பதாம். கல்வி ஓரளவுக்குக் குறைவாகவேயுடைய மக்களுக்கே இந்தப் புதிய சுழல் நாலகங்கள் நூல் வழங்கி வந்த போதிலும், இவை மிகுந்த செல்வாக்கை அடைந்து விட்டன. இத்தகைய நூலகங்கள், சிற்றுார், பேரூர், கடைகள், யாங்கணும் பரவிவிட்டன. இந்தச் சுழல் நூலகங்களால் விற்கப்படுகின்ற நூல்களுள் காதற்கதைகள், துப்பறியும் நெடுங்கதைகள் முதலிய பொழுது போக்கு நூல்களே பெரும்பான்மையாகும். வெறும் காதற்கதைகளையும், நெடுங்கதைகளையும் தானே இச் சுழல் நூலகங்கள் விற்கின்றன என்று எண்ணி அவற்றைப் புறக்கணித்து விடலாகாது. ஏன் என்றால். இச்சுழல் நூலகம் இல்லையென்றால். எவரும் நூல்கள் பக்கம் கண்ணெடுத்தும் பாரார். அத்தகையோரைப் படிக்கவைக்கும் பெருமை இந் நூலகத்தைச் சாருமல்லவா?

நூலகத்தின் பணிகள்

நூலகம் செய்யவேண்டிய பணிகள் மிகப் பலவாக இருந்த போதிலும், சுழல் நூலகங்களால் மிகச் சிறுபான்மையான மக்களையே படிக்கவைக்க முடிந்தது. அதற்குரிய காரணங்கள், பெரும்பான்மையோர் உரிய சந்தாத் தொகையைக் கொடுக்கமுடியவில்லை என்பதும், இந்தச் சுழல் நூலகங்களின் பணிகளும் ஒரு வரையறைக்கு உட்பட்டவையே யென்பதுமாம். புதினம், பயண நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் என்பன தவிர, வேறு கற்றறிந்த