பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

துக்கு எப்பொழுதும் உணர்த்திக் கொண்டே இருக்கும் அம்மட்டுமன்று இக்குழு, மக்களுக்கும் நூலகத்துக்கும் இடையே நெருக்கமான உறவையும் தொடர்பையும் ஏற்படுத்துகின்றது. பொது நூலகங்களினால் பெரும்பாலும் பயன் அடைவோர் உள்ளுர் மக்களே. எனவே அந்நூலகங்களே ஓம்ப வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளாகும். இதனால் அரசாங்கம் இந்நூலகங்களை மேற்பார்வையிடுவதும் இல்லை; கட்டுப்படுத்தலும் இல்லை. அரசாங்கம் ஊராட்சி மன்றங்களை நூலகம் திறக்க வெண்டும் என்று எப்பொழுதும் வற்புறுத்தியதே இல்லை.

ஆங்கிலப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நூலகச் சட்டத்தை ஊராட்சி மன்றங்கள் நிறைவேற்றுவது அவற்றின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். எவ்வளவு குறைவாகப் பணம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு குறைவான பணம் இவ்வாட்சி மன்றங்கள் நூலகத்துக்குச் செலவழிக்கலாம். இதனால் ஒவ்வொரு நூலகமும் செயற்படுகின்ற முறையும், அதனால் விளையும் பயனும் வெவ்வேறு வகையாக இருக்கும்.

ஒவ்வொரு நூலகத்துக்கும் ஒவ்வொரு தொகை செலவிடப்படுகிறது. ஒரு நூலகத்துக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகின்றது என்றால், வேறொரு நூலகத்துக்கு இரண்டாயிரமும். மற்றொரு நூலகத்துக்கு ஐந்நூறும் செலவிடப்படும். இங்கிலாந்திலோ 1947-48 ஆம் ஆ ண் டி ல் எல்லா நூலகங்களும் சராசரி இலக்கு இரண்டு சில்லிங்கும் ஒன்பது பென்சும் செலவிட்டன. நகரங்களிலே சராசரிச் செலவு 3 சில்லிங் பென்சும் சிற்றூர்களிலே சராசரிச் செலவு ஒரு