பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

னர் ஒருவர் தோன்றி, நூலக உலகிலே ஓர் அரும் புரட்சி செய்யலானார். அப் புரட்சிவீரர் பெயர் சேம்சுடப்பிரெளன் (james Duff Brown) என்பதாகும். அவர் கிளெர்கன்வெல் என்பதில் நூலகத் தலைவராக இருந்தார். அவர் தாம் முதன் முதலில், பொதுமக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களைத் தாராளமாக நூலகத்திற்குள் நுழைந்து, தம் விருப்பம்போல நூல்களை எடுத்துப்போக விட்டார். இந்தத் திறந்த முறை அதற்குப் பின்னர் எல்லா நூலகத்தாராலும் போற்றிக்கொள்ளப்படுவதாயிற்று. இக்காலத்திலே, மக்கள் தங்கள் விருப்பம்போல நூலகத்திலே நூல்களை எடுக்கலாம். அவ்வாறு அவர்களே நூல்கள் எடுப்பதனால், நூல்களைப் பற்றிய அவர் தம் அறிவு மேலும் பெருக வாய்ப்புண்டு. திறந்த முறையினால் இரு பெரு நன்மைகள் ஏற்படுகின்றன. பழைய முறைகள் புதுப்பிக்கப்படுதலும், நூலார்வம், நூல் பற்றிய அறிவு ஆகியவை பெருக்கமடைதலும் ஆம். இந்தச் சீரிய திறந்த முறை இதுவரையிலும் பின்பற்றப்படாத நாடுகளிலுள்ள நூலக அதிகாரிகள், இம்முறை, நூல் களவாடல், நூல்வரிசை சிதைத்தல், சிற்றின்ப நூல்களைப் படிக்கத் தூண்டுதல் ஆகிய செயல்களைப் படிப்பாரிடையே ஏற்படுத்தாதா என்று வினாவுகின்றனர். இவ்வினாக்கள் வினாவப்பட வேண்டியனவே. இம்முறையினால் சில நூல்கள் மறைதல் உண்மையே. திறந்த முறையில், நூல்கள் முறை பிறழ்ந்து, வரிசை தவறிக் குலைந்துபோதல் உண்டு. அதற்காக, ஒவ்வொரு நாளும் நூல்கள் சரிபார்க்கப்பட்டு, முறையாக அடுக்கப்படல் வேண்டும். திறந்த முறையில் ஏற்படும் நன்மை, அதனால் ஏற்படும் தீமையைவிட மிகப் பெரியதாகும். இம்முறை