பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

என்பது இங்கிலாந்து நூலகத்தாரின் சிறந்த கருத்தாகும். இங்கிலாந்திலே நூலகத்தார் தாமே சென்று வருவோருக்கு உதவி புரிவதும். நூலகம்பற்றி அறிவுறுத்துவதும் இல்லை. வருவோர். உதவி வேண்டுகின்றவரையிலும் காத்திருத்தல் வழக்கமாகும். ஆனால், வேண்டப்படும் உதவி சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி, உதவி வேண்டுவோன், உதவி செய்யப்படாத முறையில், நூலகத்தினின்று போதல் கூடாது என்று நூலகத்தார் எண்ணுகின்றனர்.

ஒரு நூலகத்திலே எத்தனை நூல்கள் இருத்தல் வேண்டும்? இந்த வினவுக்கு உடனே ஒரு வரியில் விடையிறுத்தல் இயலாது. ஏன் என்றால், எண்ணிக்கையை விடக் தரம் முக்கியம் ; மிகச்சிறிய நூலகத்தில் கூட,சிறந்த நூல்கள் இருத்தல் வேண்டும்.எனவேதான்,நூலகம், நிறைய நூல்களை வாங்கிவைத்து எல்லோருக்கும் வழங்குகிறது. மேலும், நூலகத்திலே நெருக்கடி அதிகமானால், நூலகத்தின் நூல்களிலே பெரும்பகுதி நூலகத்திலன்றி, மக்களுடைய இல்லங்களிலே இருக்கும். பொதுவாக, ஊர் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூல் கொடுக்கின்ற அளவுக்கு நூல்கள் ஒரு நூலகத்திலே இருக்குமானல் அதுவே போதுமானதாகும். பெருவாரியான நூலகங்களிலே எடுத்துச் செல்லப்படும் நூல்களிலே நெடுங்கதைகளே அதிகமாக இருந்தபோதிலும், நூலகத்திலே நெடுங்கதை நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. இந்த வேற்றுமைமைக்கு மூன்று காரணங்கள் உண்டு :

1. நெடுங்கதை தவிர ஏனைய நூல்களின் எல்லை மிக விரிந்தது.