பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் பொது நூலக இயக்கம்

1. தோற்றுவாய்

"நூலகம் இல்லாத ஊரின் அழகும் பாழ், அறிவும் பாழ் என்ற நிலை இன்று ஏற்பட்டு விட்டது. அச்சுப் பொறியின் வளர்ச்சியால் நூல்களின் தொகையும் பெருகியது; பயனும் பெருகியது; ஆகவே நூலகம் ஆங்காங்கே ஏற்பட்டு வளர்தல் ஓர் இயக்கமாகவே செழித்து விட்டது. பொது மக்களின் நல் வாழ்க்கைக்கு உரிய சமூகத் தொண்டுகளில் நூலகமும் சிறப்பிடம் பெற்றுள்ளது” என்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனர் பொன்மொழிகளுக்கேற்ப, இன்று எல்லா நாடுகளிலும் பொது நூலக இயக்கம் வேரூன்றித் தழைக்கத் தொடங்கியுள்ளது என்னலாம். முதன் முதலில், பொது நூலக உணர்வின் காரணமாய் அதனைப் பெரு இயக்கமாக கடத்தி வெற்றி கண்ட பெருமக்கள் ஆங்கிலேயரே ஆவர்.

"நூலகத்தில் உனக்குக் கிடைப்பன எவை என்பதை எண்ணிப்பார். பல்லாயிரம் ஆண்டுகளாக