இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொல்லை நீக்கி நலழுடன் வாழலாம்
23
தேள் கடியைத் தடுத்து
நலமுடன் வாழ்வோம்! தேள் இனத்தில் பல வகை உண்டு. வீட்டுத்தேள்,மரத்தேள்,கருந்தேள்,செந்தேள் போன்ற தேள்களை நாம் பார்த்திருக்கிறோம்.
வீட்டின் மூலை முடுக்குகளில், அடர்த்தியான நீண்ட நாட்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளில், வீட்டின் தூலங்களில், வீட்டுக் கூரைகளில் தேள்கள் வாழ்கின்றன.
அந்தத் தேள்கள் சில நேரங்களில் கீழே விழுந்து, பீரோக்கள்,பெட்டிகள்,பாய் படுக்கைகளிலும் புகுந்து கொள்வதுண்டு.
நாம், நமது வீட்டுப் பொருள்களை உபயோகிக்க எடுக்கும் போது, நம்மையும் அறியாமல் தேள்கள் கொட்டி விடுகின்றன. தேள் சில நேரங்களில் கடித்து விடுவதும் உண்டு. சில நேரங்களில் தனது வால் கொடுக்குகளால் கொட்டி விடுவதும் உண்டு.
தேள் கொட்டிய மனிதன், ஐய்யோ குய்யோ என்று அலறியடித்துக் கதறுவான்.அது கொட்டிய இடத்தில் குடச்சல் எடுக்கும். சிலருக்குத் தேள் கொட்டிய இடத்திலேயே குடைச்சல் இருக்கும்.
வேறு சிலருக்குத் தேள் கொட்டிவிட்டால், உடல் முழுவதும் குடைச்சலும் வேதனையும் கொடுக்கும். தேள் விஷம் அந்த மனிதனுடைய உடலில் வெகு சீக்கிரமாகப் பரவுகிறது என்று நாம் உணரவேண்டும்.
தேள் கொட்டியவுடன், அது கொட்டிய இடத்தை ஒரு கயிற்றால் அல்லதது துணியால் உடனே இறுகக் கட்டி