பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

23


விடவேண்டும். அதனால், உடலில் பரவுகின்ற தேள் விஷத்தைத் தடுத்துவிடலாம். உடனே, வெங்காயம் இருந்தால் அதை அறுத்து அந்தச் சாற்றை தேள் கடித்த இடத்திலே தேய்ப்பதால் ஓரளவு விஷம் தடுக்கப்பட்டு குடைச்சலின் வேதனை குறைய நேரிடும்.

தேள் கொட்டிய இடத்திலே கிராம்போன் ரிக்கார்டு உடைந்த பிளேட்டு கிடைத்தால், அதை சுத்தமான இடத்தில் தேய்த்து அந்தச் சாந்தை எடுத்துத் தடவலாம். அதனாலும் தேள் விஷம் இறங்கிவிட வழியுண்டு.

தேள் கடித்த உடன், அருகே உள்ள டாக்டரிடம் சென்றாக வேண்டும். அவர் கடித்த இடத்தில் ஊசியைப்போட்டால், கடிக்கப்பட்ட விஷம் இறங்க வழியேற்படும். ஆனாலும் தேள் கொட்டிய இடத்திலே சில மணி நேரங்கள் அதிக வேதனைதராத குடைச்சல் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்தக் குடைச்சல், நம்மைத் தேள் கொட்டிவிட்டதே என்ற பய உணர்ச்சியே தவிர, அதனால் மனிதனுடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் நேராது.

சில மணி நேரங்கள் ஆனதும், எங்கே நம்மைத் தேள் கொட்டிற்று என்பதை அடையாளம் காண முடியாத நிலையில், முற்றுமாகத் தேள் கடித்த குடைச்சல் நின்று போகும்.

தேள்களை நமது வீட்டில் சேரவிடாமல் இருக்க வேண்டுமானால், குப்பைக் கூளங்களை நாள்பட்ட வகையிலே சேரவிடக்கூடாது.தினந்தோறும் வீட்டின் மூலை முடுக்குகளையும், வீட்டின் சுவர்களையும் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும், வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறைாயவது வீட்டின் தூலங்களை, கூரைப் பகுதிகளை ஒட்டடைக் கொம்பால் அடித்துச் சுத்தம் செய்தால், ஒட்டடை சேராது. அந்த ஒட்டடையிலே உள்ள