பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் : 29 மனப்பாடம் பண்ணியவை. இவை நாளடைவில் அண்ணலாரின் உள்ளத்தைக் கவர்ந்தன; நன்கு பயன்பட்டன. ‘வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமைந்தன. இவை இக்கால இளைஞர்கட்குப் பயன்படும் பொருட்டு நூல் வடிவம் பெற்று வெளியிடப் பெற்றது. (ஆ) மும்மணிகள்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய 'திரிகடுகத்தின்" மறுபிறவி இது. பழந்தமிழ் மக்களின் அறிவை, அன்பை, அறத்தை, பண்பை, வாழ்வை நன்கறியத் துணை செய்யும் முறையில் அமைந்தது. இந்நூல் கவிதையாக இருப்பதால் அதனை எளிய நடையில் எழுதிப் பொதுவுடைமையாக்கி மக்கள் அனைவரும் பயன் பெறுமாறு வழங்கியுள்ளார் கலைமாமணி விசுவநாதம். நேருக்கு நேராக கருத்துரையாகவே எழுத பெற்றுள்ளது. பெரும்பான்மையான கருத்துகள் திரிகடுகத்தை ஒட்டியனவே உள்ளன. காலத்திற்கேற்ப வேண்டாத சில விடப்பட்டு வேண்டிய சில வருவிக்கப் பெற்றுள்ள்ன. மக்களுக்கு இது நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. (இ) நான்மணிகள்: நான்மணிக்கடிகை என்னும் நூலின் (பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று)" மறுபிறவியாகும் இந்நூல். வெண்பா யாப்பில் அமைந்த பாக்களின் கருத்தை எல்லோருக்கும் பயன்படும் பொருட்டு எளிய நடையில் எழுதி நற்பணி செய்துள்ளார் நம் அண்ணலார். மும்மணிகள் போலவே, இதிலும் சில கருத்துகள் விடப் பெற்றும் சில சேர்க்கப் பெற்றுமாக அமைந்துள்ளது. இளைஞர்கட்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பலாம். 10. திரிகடுகம் - சுக்கு. மிளகு, தீப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த ஒரு மருந்து. இது உடலைப் பற்றிய பிணிகலைத் தீர்க்கும்ஒரு சிறந்த மருந்து. உள்ளத்தைப்பற்றி நிற்கும்பிணிகளைத் தீர்க்கும்.இந்நூலும் மருந்தின் பெயரையே பெற்றிருப்பது ஒரு சிறப்பு. ஒவ்வொரு பாடலிலும் மூன்று முக்கிய கருத்துகள் அமைந்திருக்கும். - 11. உடற்பிணியைத் தீர்க்கும்தான்கு மருந்துச் சரக்குகள் அமைந்திருப்பது போல் உள்ளத்தின் பிணி தீர்க்கும் நான்கு முக்கியகருத்துகள் அமைந்து நூலின் பெயராகியது.