உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[18] காய்கறிக் கூடையுடன் கிராமாந்திர சுடு மணலில் நடந்து செல்லும் அன்றாடங் காய்ச்சி" வியாபாரிகள் படும் அல்லலும், ஈன ஜென்மமெடுத்தேன் என் அய்யனே என்று கரகரக்கும் தொனியில் பாடிக் கொண்டு, சுரைக்காயைக் குடைந்து மூங் கிலைச் செருகி தயாரித்த சுத்த சுதேசித் தம்புராவை மீட்டியபடி ஊர் ஊராக உருண்டு புரண்டு பிச்சையெடுக்கும் மனி தப் பழுப்புகள் - தளிர்கள் - படும் வேதனை யும், அப்போது தான் உன் உள்ளத்தைத் தொட முடியும், குளிர் நிழலிலிருந்து கோடைக்கு வா ! கொடைக்கானலுக்குப் குற்றாலத்திலிருந்து போகாதே! கோடைக் கனலை கொஞ்சம் ரசித்துப்பார்! அறு சுவை யுணவையே ஆயுள் பூரா வும் நீ அருந்தினால் போதுமா? உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? உன்னைச் சூழ்ந்துள்ள உலகம் மிகப் பெரியது ! கஞ்சியே குடித்து வாழும் ஒரு பெருங் கூட்டம். அதுவுமின்றி வாடும் ஜனக் கோட்டம். அவைகளைப் பற்றி நீ யோசிப்பது எப்போது? என்ன; சொன்னதைக் கேட்காமல் என்னையே பார்க்கிறாய், தங்க நிறமாயிருக் கிறேனே யென்றா? இல்லை - இல்லை - என் னோடு கலந்துள்ள உமிகளைப் பார்க்கிறாய். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/19&oldid=1706693" இலிருந்து மீள்விக்கப்பட்டது