உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[21] மனங் குலையா முனிவர்களுக்கு, அசையாத உன் உறுதியை உவமையாகக் காட்டுகிறார் கள் சிலர். எனக்கல்லவா தெரியும் உன் சேதி! வலுவிலே வந்து உன் தோளைத் தழுவும் மேகச் சீமாட்டிகளின் மோகத் தைத் தணிப்பதற்காக - நீ உன் குளிர்க் கரத்தை நீட்ட, கரம்பட்ட அந்தக் காரி கைகள் மயங்கி, மேலே செல்ல முடியாமல் மழையாகக் கரைந்து, நதிக் கரங்களால் உன்னைச் சுற்றியணைக்கும் ஆவேசத்தை நானல்லவா நேரே பார்த்தவன். குப் பிறகுதானே அனைத்தும் துறந்த முனி வர்களும் அந்தப்' பாசத்தைத் துறக்க முடியாது என்று அகிலமதிரக் கூவுகிறேன். J அதற் மலையே! நீ ஒரு அழுத்தக்காரக் காத வன். அதோடு அறிவு நிறைந்த கவிஞன். அதுவும் நன்றி மறவாத கவிஞன். கவி ஞன், எழுந்த கருத்தை மக்களிடம் வெளி விடுவான். நீயும் விழுந்த மழையை மாநிலம் செழிக்க வழங்குகிறாய். . மலையரசா ! நீ வளராவிட்டால் - வைய மெங்கும் உன் அகிலும் தேக்கும் நிறைந்த உயர்ந்த தோள்களை நிமிர்த்தாவிட்டால்- வளமேது? வாழ்வேது? வாழ்க உன் வைரத் தோள்கள்! பொன்னும் பொருளும் தருவதால் பூமிக்கோர் வள்ளலாய் - உலகிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/22&oldid=1706696" இலிருந்து மீள்விக்கப்பட்டது