உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலே. கதிர் விழுங்கி - மதி உயிழும் கடலே! நில மடந்தைக் கெழிலூட்டும் நீல உடை யே! ஜகப் பெண்ணாளின் சந்தன மேனி யில் சலசல வெனப் பறந்தாடும் சல்லாத் துணி நீ ! பச்சைச் சிசுவின் பவள உதட் டிலே வழிந்து நிற்கும் பால்! கரையில் நீ உமிழும் நுரை! இரண்டும் ஒன்று! அசைந்தாடும் அழகு உதிர் அலைக் கரங் களால் அருமையான சங்குகளை நீ அள்ளி இறைப்பது; செங்கரும்புச் சிறுகைகளால் குழந்தைகள் செய்யும் இன்ப விஷமத்தை உணர்த்திக் காட்டுகிறது. ஓய்வு பெற உன்பால் வருவேன். ஓசை முழக்கத்தால் உள்ளத்தைத் தாலாட்டுவாய். தூங்காப் பெருங்கடலே! தூய்மை நிறை நம் சந்திப்பில் சிறு தொய்வு ஏற்பட்டு விட்டது. ஆனாலும் கடலே! என் மட லுக்குப் பதில் எழுது. "உழைக்கும் பாட்டாளி - உயரும் முதலாளி - உண்மை நவில் அறிஞன்- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/38&oldid=1706714" இலிருந்து மீள்விக்கப்பட்டது