உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண் மீன். வர்ணனை முழு நிலவாம் வைரக்கட்டி, முகில் குன்றில் மோதுண்டு சிதறிவிட்ட ஒளித் துண்டோ தாரகையே நீ தான்! பாய்ந் தெழுந்த மின்னலின் படைப்போ ! சாய்ந்துவிட்ட மணி முடியின் மாணிக்கச் சிதறலோ! வேய்ந்துவிட்டான் வானக் கூறையெல்லாம் இயற்கைக் கொத்தன் - இரத்தினத்தின் முத்துக்களால்! LOMORIT வாளன் வரவு பார்க்கும் நிலவு மங்கை, வான மஞ்சத்தில் பரப்பிவிட்ட மலர்க் குழுவோ நீங்கள் எல்லாம்! போட்டி கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி, தானுமதுவாகப் பாவித்துத் தானுந் தன் பொல்லாச் சிறகை விரித்தாடுங் காட்சி கண்டேன் - அதுபோல் - பொன் கடையில் புது நீலப்பட்டினிலே பரப்பி யுள்ள வைரமென - விண்ணிடையே கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/41&oldid=1706717" இலிருந்து மீள்விக்கப்பட்டது