பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ

குறிப்பிட்ட ஒரு நாளில் ஆப்பரேஷன் நிகழ்ந்தது. ஆப்பரேஷன் நடைபெற்ற இரண்டு-இரண்டரை மணி நேரமும், பீயர்ஸன் திடுமென மிஸ்டர் மூர் ஆக மாறி விடக் கூடாதே; அப்படி மாறி முரட்டுத்தனமாக நடக்கத் தொடங்கினுல் அவர் உயிருக்கே ஆபத்தாகி விடுமே என்று டாக்டரின் உள்ளம் பதை பதைத்துக் கொண்டிருந்தது.

r நல்ல வேளைவாக, விபரீதம் எதுவும் தலைகாட்டா மலே, ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இரண்டு வார கால சிகிச்சை நிகழ்ந்தது.

ஒருநாள்-நோயாளி பூரண குண நிலையை எட்டிக் கொண்டிருந்தபோது-டாக்டர் தமாஷாகக் கேட்டார்: ‘இனி உங்களை வைர வியாபாரி பீயர்லன் என்பதா? தேயிலைத் தோட்ட முதலாளி என்பதா?

அவருக்குக் கிடைத்த பதில் டாக்டரைத் திகைக்க் வைத்தது!

‘பீயர்ஸ்ளு? மூரா? என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை, என்ருர் நோயாளி! வேறு ஒரு பெயரையும் தொழிலேயும் குறிப்பிட்டார்.

எதை நம்புவது என்றே டாக்டருக்கு விளங்க வில்லை. தமது அறுவை வைத்தியம் புதியதோர் குழப் பத்தை உண்டாக்கி விட்டதோ என்ற கவலை வேறு!

அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லைதான். அந்த நபர் மூன்ருவதாகக் குறிப்பிட்ட பெயரும் தொழிலும் தான் அவருடைய சுயநிலை என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் குறிப்பிட்ட ஸ்தாபனத்திலிருந்து ஒரு பிரதிநிதி வந்து சேர்ந்தார். -

'இரண்டு மாதங்களாக எங்கள் முதலாளி காணுமில் போய் விட்டார். எவ்விதமான தகவலும் இல்ல்ை.