பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாசக் கோட்டை

ஒவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றிப் பிரமாத டிாக எண்ணிக் கொள்கிருன். தான் பெரிய ஆளு? என்று மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிருன்.

இரண்டுபேர் இருந்தாலும் சரி; ஒருவன் அடுத் தவன் பாராட்டையும் வியப்பையும் பெறவேண்டும் என்பதற்காகப் பெரும் பேச்சுப் பேசுவதில் உற்சாகம் காட்டுகிருன், புகழ் ஆசை என்பது யாரையும் எதுவும் செய்யத் துரண்டும்.

பிறரது பாராட்டுதலேயும் வியப்புரையையும் பெற வேண்டும் என்ற ஆசையோடுதான் அநேகர் அளப்பு களில் ஈடுபடுகிருச்கள். தாம் செய்யாததை எல்லாம் செய்கு முடித்து விட்டதாக அளப்பார்கள். கோபுரத்தி லிருந்து குட்டிக்கரணம் போட்டேன்; ஆகாயத்தில் பறந்தேன் என்று அளந்து தள்ளுவார்கள்.

அந்தக் காலத்து நாடக மேடைக் கள்ள பார்ட் காரன் பாடிக்கொண்டு குதிப்பானே-உங்களுக்குத் தெரியுமல்லவா? கோட்டைக் கொத்தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன்; பலபா, கூசாமல் குதிப்பேன்! ஒரு நீச்சல் கப்பலைப் பிடிப்பேன் பலபா! கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்’ என்று. அந்த ரீதியில் பெருமை அடிக்க வேண்டும் எனும் துடிப்பு ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகிறது.

ஒவ்வொரு மனிதனுள்ளும் இரண்டு பண்புகள் குடியிருக்கின்றன; நல்ல பண்பும், தீய சுபாவமும்.