பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

சின்னங்களாக நகர்ந்த அவர்கள் திடுக்கிட்டு அலறி ஞர்கள்.

உற்சாகத்தோடு, உணர்ச்சி பரவசத்தோடு, தம்மை மறந்த நிலையில், கைகளே ஆட்டிக்கொண்டு வண்டியில் கதவோரத்தில் நின்ற பெரியவர், வண்டி நிற்பதற்கு முன்னரே இறங்கி விட்டார். மனைவி மக்களின் முகத்தையே பார்த்தபடி அடி எடுத்துவைத்த அவரது கால்கள் தவறி, பள்ளத்துள் போகவும், அவர் ரயிலுக் குள் விழுந்து கோரமாக அறைபட்டுச் செத்தார்.

அவர் எல்லோரையும் போல் இயல்பாக நடந்து கொண்டிருந்தால், அவருக்கு இத்தகைய முடிவு ஏற். படாமல் இருந்திருக்கலாம். அவருடைய போக்கே இயக்கும் சக்திக்குக் குறும்புத்தனமாகச் செயல் புரியும் ஆசையைத் துரண்டியது போலும்! -

இந்தக் கதை டெம்ப்டேஷன்” (ஆசையைத் துண்டுதல்) என்று ஒரு புத்தகத்திலும் டெம்ப்டிங் தி பிராவிடன்ஸ்’ (தெய்வ சக்தியை தீமை செய்யும்படி துண்டுதல்) என்று ஒரு தொகுதியிலும், ஆங்கிலத்தில் காணப்படுகிறது. உலகத்துச் சிறு கதைகளில் அருமை யான கதைகளுள் இதுவும் ஒன்று.

உணர்ச்சிகளைச் சொல்லோவியமாக்கும் கலையில் தேர்ந்த அலெக்ஸாண்டர் குப்ரின் புகழ்பெற்ற ஒரு நாவலும் எழுதியிருக்கிருர். யாமா-தி பிட்’ என்பது அதன் பெயர். விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தி அதை வியாபாரமாக வளர்க்கும் விடுதிகளைப் பற்றிய நாவல் அது. விபசாரத்தைத் தொழிலாகக் கொள்கிற பெண்களின் அவல வாழ்வையும், விபசார விடுதிகளின் உண்மைத் தன்மையையும் சுட்டிக் காட்டும் ஒரு இலக் திய சிருஷ்டி ஆது. அத்தொழிலில் வெறுப்பும், அத் தொழிலில் ஈடுபட்ட அபலைகளிடம் அனுதாபமும் கருண்