பக்கம்:முத்துச் சிப்பி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.59

ஆனால், விதியின் செயல் வேறாக இருந்தது. அவள் பார்வையில் பட்ட மற்ற வர்களை விட, மூர்த்தி அவளுக்குச் சிறந்தவனாகத் தோன்றினான். அவனிட த் தில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவனிட மிருந்து அவள் செல்வத்தையோ, போக பாக்கியங்களையோ எதிர்பார்க்கவில்லை. உண்மையான அன்பு ஒன்றைத் தான் எதிர்பார்த்தாள். கணவனும் மனைவியும் அன்பிலே லயித்துவிட்டால் மற்ற சிறு பூசல்கள் யாவும் மறைந்து விடும். அந்தப் பிடிப்பு - அதாவது காதல்-அவர் களிடம் ஏற்படவில்லை.

ராதாவுக்கு தனிமை உணர்ச்சி ஏற்பட்டது. உலகத் தில் தான் தனியாக இருப்பதுபோல் தோன்றியது. நெஞ்சில் சுமக்க முடியாமல் துயரச் சுமைகளைச் சுமந்து கொண்டு இருந்தாள். அவற்றைக் கீழே இறக்க அன் புள்ளம் கொண்டவர் யாராவது தேவை. அது யார்? யாருமே இல்லை என்றுதான் அவள் மனம் விடை பகர்ந்தது.

அன்று வழக்கம் போலத்தான் சூரியோதயம் ஆயிற்று. வாள் வெளியில் களங்கம் இல்லை. நிர்மலமான ஆகா யத்தில் பொன்னிறம் காட்டிக் கொண்டு கதிரவன் விசையாக எழும்பி வந்தான். வாழ்த்தி வரவேற்க வேண்டிய காலைப் பொழுது. இளமையும் இன்பமும் ததும்பும் அக்காலை வேளையில், ராதா மெல்லக் கண் களை விழித்துப் பார்த்தாள். அவள் மனசில்-அதாவது துரங்கும்போது-ஒரு சலனம் ஏற்பட்டது. திடீரென்று விழித்துக் கொள்வாளாம் ராதா. அவள் படுக்கை அருகில் மூர்த்தி அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பானாம். வந்து விட்டீர்களா? எங்கே என் மேல் கோபித்துக் கொண்டு, வராமல் இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன் 1’ என்று கேட்டுக் கொண்டே எழுவாளாம் ராதா. அப்புறம்