பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பொதிமாட்டுப் பாதையை வணிகர்களுக்காகப் பாதுகாத்தான். கள்வர் பயமும், துஷ்ட விலங்குகளின் உபத்திரவமும் இல்லாமல் வணிகர்களின் வியாபாரப் போக்குவரத்துக்கு வசதி செய்து, அவர்கள் தங்கவும் வசதி செய்து கொடுத்தான் அவ்விடம் "குறுப்பிலாக்காவு" என்று அழைக்கப்படுகிறது குறும்பில்லாத காடாக அவ்விடத்தை அவன் மாற்றினான். சிறிது காலத்திலேயே புகழ் பெற்றான். 4. அச்சுப்பாட்டில் கலியாணமான அன்றே அவன் இறந்ததாகச் சொல்லப்படுகிறது முத்துப் புலவரின் கதைதான் உண்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் அச்சில் உள்ள வில்லுப்பாட்டில் சண்டைக்குப் போகும் பட்டனோடு வாலப்பகடை செல்லவில்லை மறுநாள் கூடத் தன் மக்களோடு இறந்த மருமகனைக் காணச் செல்லவில்லை. கலியானத்திற்குப் பின் அவனைப் பற்றிய பேச்சே இல்லை. நாடோடிப் பாடல்களில் இவ்வாறு முக்கிய கதாபாத்திரங்களை நட்ட நடுவில் மறந்து விடுவது மரபல்ல, சின்னத்தம்பி கதையில் மகன் இறந்ததை அறிந்த தாய், மனம்பேசி வைத்திருந்த சோனைச்சி,தகப்பன் ராமப்பகடை, அனைவருமே உயிர்விடுகிறார்கள். அவனுடைய நாய்கூட உயிர் விடுகிறது. ஆகையால் வாலப்பகடை உயிரோடிருந்தால் அவனது முடிவு பற்றிக் கட்டாயம் வில்லுப்பாட்டு சொல்லியிருக்கும் பகடை இறந்துவிட்டனென்றும், இறந்தபின் முத்துப்பட்டன் இனத்தாருக்கும் உழவர்களுக்கும், வணிகர்களுக்கும் செய்த நன்மைகளைப் பற்றி முத்துப்புலவர் வில்லுப்பாட்டில் பாடுகிறார். சுப்பிரமணியக் கவிராயரும், வாலப்பகடை இறந்த பின்தான் கொள்ளை நடந்தது என்று சொல்லுகிறார். 5. கொள்ளை நடத்தியவர்கள் வன்னியக் கரந்தை தேவர்கள் என்று முத்துப் புலவரும் கப்பிரமணியக் கவிராயரும் ஒருமுகமாகச் சொல்லுகிறார்கள். காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது இதுதான்; அவர்கள் தேசத்தில் 11 வருஷப் பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் உக்கிரங் கோட்டைப் பாளையக்காரர் தங்கள் சாதியைச் சேர்ந்தவன் என்று புகலிடம் கேட்டார்கள். அவன் அவர்களைப் பொதிகை மலைக்கிடைகளைக் கொள்ளையடிக்க ஏவித்தானும் ஆட்களை அனுப்பினான். அவருக்கும் பங்கு கொடுப்பதென்று உடன்படிக்கை ஆயிற்று.