பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கதா பாத்திரங்களை மதிப்பிடுவதில் அவரவர்கள் செய்கையைத்தான் வில்லுப்பாட்டு அடிப்படையாகக் கொண்டுள்ளது முத்துப்பட்டனது பரந்த உள்ளத்தையும், தியாகத்தையும், வீரத்தையும், குடி ஒம்பலையும் வில்லுப்பாட்டு போற்றிப்பாடுகிறது. தாழ்ந்த சாதி சக்கிலியப் பெண்களின் அழகையும், இசையினிமையையும், கற்பையும், உறுதியையும் புகழ்ந்து பாடுகிறது வாலப்பகடையின் மான உணர்ச்சியையும் முன்யோசனையையும் அறிவுத் திறனையும் பரந்த மனப்பான்மையையும் பெருமையாக வருணிக்கிறது. சாதிப்பெருமை, பேராசை, குறுகிய மனப்பான்மை ஆகிய தன்மைகள் கொண்ட முத்துப்பட்டனின் தமையன்மாரை வில்லுப்பாட்டு கேலி செய்கிறது. பஞ்சத்தில் அடிப்பட்ட வன்னியர் மீது இரக்கம் ஏற்படுகிறது. ஆனால் அவர்களது களவுத் தொழிலும், அவர்களுள் ஒருவனது கோழைத்தனமும் நமக்குக் கோபத்தை உண்டாக்குமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. முடிவுரை நாட்டுக் கதைப்பாடல்களிலும் கர்ணபரம்பரைக் கதைகளிலும் சாதித் தடைகளை மீறிக் காதல் துளிர்த்து வளர்வது போற்றப்படுகிறது. அக்கதைகளுள் சிலவற்றைப் பற்றியாவது தெரிந்துகொண்டால்தான் முத்துப்பட்டன் கதையின் சிறப்பு இயல்பை நாம் உணர முடியும். ஆகையால் திருநெல்வேலியிலும் நாஞ்சில் நாட்டிலும் வழங்கும் கலப்பு கணம் பற்றிய கதைகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம். மேல்மலை அடிவாரத்தில் சிலசைலம் என்றோர் கிராமம். இக்கிராமத்தில் சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அடிக்கடி மலைக்கு வேட்டைக்குச் செல்வதுண்டு. அங்கு கலைப்பளிங்கர் சாதியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்தான். அவள் காட்டு சாதியைச் சேர்ந்தவள். முற்றிலும் நாகரிகம் அடையாத இனத்தவள். பளியர்கள் வேட்டையாடியே பெரும்பாலும் தம் வாழ்க்கையைக் கழித்தார்கள். பெண்கள் சிறிதளவு மலை வேளாண்மை