பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf17. எறும்புஇன்பம் உள்ள எறும்பே,
எங்கள் கட்டிக் கரும்பே,
துன்பம் ஒன்றும் புரியோம்;
தின்ப தற்கும் தருவோம்.

உன்னைப் போல உழைப்போம் ;
ஊக்கம் கொண்டு பிழைப்போம்.
பொன்னின் மிக்க எறும்பே,
போக வேண்டாம் திரும்பே.

காலை தன்னில் எழுவோம் ;
கடவுள் பாதம் தொழுவோம்.
நூலைக் கற்போம் சீராய்,
நுண்ணெ றும்பே, வாராய்.

18