பக்கம்:முருகன் அந்தாதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

நீண்ட புகழ்பெற்ற யாவரும்
விந்தனர் கித்தியனாப்
ஏண்டரு மாமரு தாசல
வேலன் இருந்தனனே.  (19)

நேற்றிருந் தான் இன்று மாண்டனன்
என்னும் நிலையறிந்தே
போற்றினன் கின்னேப் புகழ்வேண்டி
லேன்உயிர் போம்பொழுதில்
ஆற்றகில் லாத்துயர் தந்திடுங்
காலன் அடலறுத்துன்
காற்றுணை தந்தருள் மாமரு
தாசலக் கட்குகனே.  (20)

குகனே குமரா குமுகா
அழகா குறைவில்உமை
மகனே திருமால் மருகா
மறையின் மறைபொருளே
சகனே வளிமா மணாளா
மருதச் சுரும்பினனே
சகம்கேர் மயலிற் படாமலிவ்
வேழையைத் தாங்குவையே.  (21)


19. பொருப்பு-மலே வித்தனர்.இறந்தனர். ஏண் தரும். பெருமையை உண்டாக்கும். -

20. கால் துணை-இரண்டு திருவடிகள்.

21. குழகா-இளமையுடையவனே. வளி-வள்ளி. மருதக் சுருப்பு:மருத மலே. சகம் நேர்.உலகிற் படும். டியல் மயக்கம்,