பக்கம்:முருகன் அந்தாதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அகமேய ஐந்திணை யின்முற்

றிணையில் அலர்மலராத்

திகழ்வார நின்ற குறிஞ்சி

புறமாந் திணையில்முதற்

புகல்வாரும் வெட்சி இவை நினக்

காமெழிற் பூக்களன்றோ

மகவான் தொழுமரு தாசலம்

மேய மயிலவனே.

(37)


மயில்அவன் வாகனம் அஃதே

பிரணவ மாமனுவாம்

மயர்வறு மோங்காரச் சோதியி

னுள்ளே வயங்குகின்ற

ஒயிலினைத் தோகை மயிலிடைத்

தோன்றும் உருவுணர்த்தும்

குயிலுறு சோலை மருதா

சலத்துறை கோவினுக்கே.

(38)


கேடற்ற சோதிஎன் கேடறுப்

பான்இக் கிளர் வியில்

ஈடற்ற இன்பம் அருளுகின்

றான்மது வீட்டமெனப்

37. மகவான்-இந்திரன். அகத்திணையில் முதல் திணைக் குரிய பூவும் புறத்தினேயில் முதல் திணைக்குரிய பூவும் முருகனுக்கு உரியன என்றபடி. -

38. மனு-மத்திரம் ”ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடு மயிலென்ப தறியேனே” என்பது திருப்புகழ். மயர்வு அறு மயக்கத்தைப் போக்கும். ஒயில்-அழகு.