பக்கம்:முருகன் அந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


கோனென ஞாலம் புரக்கும்
திருவும் குறிக்ககிலேன்
தேனென நின்திரு நாமம்
மொழிந்து திருவடிக்கே
ஆன அடிமை விரும்பினன்
மாமரு தாசலனே.
(69)

சலனமில் லாத மனத்தினில்
நின்னுருச் சாரவைத்துப்
புலனிற்செல் லாத படியொன்றி
அன்பு பொருந்திநைந்து
கிலனுற்ற மீனென நின்னருட்
காக நிதந்துடிக்கும்
நலனுற் றிடவருள் ஏர்மரு
தாசல நாயகனே.
(70)

அகமும் புறமும் இரண்டின்றி.
ஒன்றென ஆர்ந்தவர்பால்
மிகஒன்றி வாழக் கவலைவக்
தால்கின் விரைமயில்மேல்
தகவந்த கோலம் கருதி
அமைதியைச் சாரஅருள்


69. பதம்பதவி. குறிக்ககிலேன்-யான் எண்ணவில்ல். அடிமை-அடிமையாகும் தன்மை.

70. ஏர்-எழுச்சியையுடைய.